பிரமாண்ட கட்டவுட்டுடன் ரஜினி 47 கொண்டாடிய ரசிகர்கள்..வைரல் வீடியோ
பெங்களூரில் நடிகர் ரஜினியின் 47 வருட திரை உலக வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட்டவுட்டை அமைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169 ஆவது படத்தில் பிசியாக இருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இது குறித்தான அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோக்களும் வைரலானது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில்சூப்பர் ஸ்டாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது படக்குழு. அந்த போஸ்டரின் படி இந்த படத்தில் ரஜினிகாந்தின் ரோல் திரில்லாக இருக்கும் என தெரிகிறது. வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார்.
மேலும் செய்திகளுக்கு....விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்
படத்தின் பெரும் பகுதி ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகிறது. படத்தில் சாண்டல்வுட் நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் எதிர் நாயகனாக நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் யோகி பாபுவும் திட்டத்தில் சேர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... என்ன கொடுமை சார் இது... இந்த சட்டையோட விலை 50 ஆயிரத்துக்கு மேலயா...! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைகர் நாயகன்
மற்ற நடிகர்கள் மற்றும் பல குழுவினர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் துவங்கிய இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் திரையரங்கிற்கு வரும் என கூறப்படுகிறது. ரஜினி தற்போது தனது 47 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளார். சூப்பர் ஸ்டார் திரை உலகிற்கு வந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டது .
பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான ரஜினி வில்லனிலிருந்து சூப்பர் ஸ்டாராக தர உயர்ந்தவர். தற்போது சூப்பர் ஸ்டாரின் 47 வது ஆண்டை ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி பெங்களூரில் நடிகர் ரஜினியின் 47 வருட திரை உலக வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட்டவுட்டை அமைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அச்சச்சோ... விஜய்க்கு நடந்தது இப்போ ரஜினிக்கும் நடக்குதே... கடும் அப்செட்டில் நெல்சன்
/p>