MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாஸ் காட்டிய மலையாள சினிமா! ஒரே வருடத்தில் இத்தனை 100 கோடி வசூல் படங்களா?

மாஸ் காட்டிய மலையாள சினிமா! ஒரே வருடத்தில் இத்தனை 100 கோடி வசூல் படங்களா?

மலையாள திரையுலகில் 2024-ம் ஆண்டு வெளிவந்த 6 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 06 2025, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
100 Crore Collected Malayalam movies

100 Crore Collected Malayalam movies

மலையாள திரையுலகம் கடந்த ஆண்டு அசுர வளர்ச்சி அடைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அங்கு வெளியான ஆவேஷம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் சக்கைபோடு போட்டன. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்து வேறலெவல் ஹிட் அடித்தது. 2024-ம் ஆண்டு மலையாளத்தில் மொத்தம் 6 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

27
Manjummel boys

Manjummel boys

மஞ்சும்மல் பாய்ஸ்

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.239.6 கோடி வசூலித்தது. மலையாள திரையுலக வரலாற்றிலேயே 200 கோடி வசூல் அள்ளிய முதல் படம் இதுவாகும்.

37
Aadujeevitham

Aadujeevitham

ஆடு ஜீவிதம்

பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்த படம் ஆடுஜீவிதம். இதில் பிருத்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.156.8 கோடி வசூலித்தது.

47
Aavesham

Aavesham

ஆவேஷம்

ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிப்பு ராட்சசன் பகத் பாசில் நாயகனாக நடித்த படம் ஆவேஷம். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.154.1 கோடி வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... 2025-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 6 தென்னிந்திய படங்கள்! 1000 கோடி கிளப்பில் இணையுமா?

57
Premalu

Premalu

பிரேமலு

2024-ல் ரிலீஸ் ஆகி தென்னிந்தியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் பிரேமலுவும் ஒன்று. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 136.8 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

67
ARM movie

ARM movie

ஏ.ஆர்.எம்

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் ஏ.ஆர்.எம். ஃபேண்டஸி படமான இது கேரளாவில் சக்கைப்போடு போட்டதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் உலகளவில் ரூ.101.8  கோடி வசூலித்து மாஸ் காட்டியது.

77
Marco

Marco

மார்கோ

100 கோடி கிளப்பில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இணைந்துள்ள படம் தான் மார்கோ. உன்னி முகுந்தன், நிவின் பாலி நடிப்பில் வெளியாகி உள்ள அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான மார்க்கோ, மலையாளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுவருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலை ஒரே வாரத்தில் அள்ளி உள்ளது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை தொடர்ந்து பொங்கல் ரேஸில் இருந்து அதிரடியாக விலகிய மேலும் 3 படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved