MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2025-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 6 தென்னிந்திய படங்கள்! 1000 கோடி கிளப்பில் இணையுமா?

2025-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் 6 தென்னிந்திய படங்கள்! 1000 கோடி கிளப்பில் இணையுமா?

2025 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவிற்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைய உள்ளது. ஆக்‌ஷன்-பேக் த்ரில்லர்கள் முதல் வரலாற்று நாடகங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைகள் வரை பல படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Ramya s
Published : Jan 05 2025, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
thug life

thug life

2025 தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கப் போகிறது. ஆம். பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பல அற்புதமான படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. ஆக்‌ஷன்-பேக் த்ரில்லர்கள் முதல் வரலாற்று நாடகங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைகள் வரை பல படங்கள் தயாராகி வருகின்றனர்.

உச்ச நடிகர்கள், சிறந்த இயக்குனர்கள் மற்றும் புதிரான கதைக்களங்களுடன், ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்தியப் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தக் லைஃப் :

தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளான கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

37
coolie

coolie

கூலி

மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ், லோகேஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கை கோர்த்துள்ளார். ரஜினியை வைத்து அவர் இயக்கி வரும் கூலி படம் 2025-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. யாக உள்ளது. 

47
Game Changer

Game Changer

கேம் சேஞ்சர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இது தான் அவர் தெலுங்கில் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் நிறைந்த அரசியல் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

57
L2 : Empuraan

L2 : Empuraan

.L2: எம்புரான்

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கிய லூசிஃபர் படத்தின் 2-வது பாகமாக உருவாகி உள்ள எல்2: எம்புரான் படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.. இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஹித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67
Toxic

Toxic

டாக்சிக்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். இந்த படமும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம்  ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77
Kantara 1

Kantara 1

காந்தாரா: அத்தியாயம் 1

காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த படத்தின் முன் கதையாக காந்தாரா அத்தியாயம் 1 ஒன்று படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். ரிஷாப் ஷெட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved