சிம்புவை பாட வைத்த ‘வாரிசு’ படக்குழு... போட்டிக்கு லேடி சூப்பர்ஸ்டாரை பாட வைத்து கெத்து காட்டும் ‘துணிவு’ டீம்
வாரிசு படத்தில் சிம்பு பாடிய செய்தி வெளியானதும் அதற்கு போட்டியாக துணிவு படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் பாடியுள்ள தகவலை வெளியிட்டு துணிவு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இரு தரப்பில் இருந்தும் போட்டி போட்டு அப்டேட் கொடுத்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே என்கிற பாட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இப்பாடல் வெளியான சில நாட்களிலேயே துணிவு படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி அப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா என்கிற பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும், இப்பாடல் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அநேகமாக டிசம்பர் முதல் வாரத்தில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Arun Vijay: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.! உடல் கன்னிப்போய் ரத்த கட்டுடன் புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்!
இது ஒருபுறம் இருக்க வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், அப்பாடல் ரெக்கார்டிங் கடந்த வாரம் நடந்ததாகவும் ஒரு தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆனது. இந்நிலையில், தற்போது அதற்கு போட்டியாக துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி துணிவு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, அப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாக ஜிப்ரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மலையாளத்தில் ஏற்கனவே பல பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர், துணிவு படம் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாக உள்ளார்.
இவ்வாறு வாரிசு படத்தில் சிம்பு பாடிய செய்தி வெளியானதும் அதற்கு போட்டியாக துணிவு படத்தில் மஞ்சு வாரியர் பாடியுள்ள தகவலை வெளியிட்டு துணிவு படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த இரண்டு பாடல்களும் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 'தளபதி 67' பிரபல ஹாலிவுட் படத்தின் மறு உருவாக்கமா? LCU படம் என்பதை உறுதி செய்யும் விதமாக கசிந்த தகவல்!