- Home
- Cinema
- சமந்தா பற்றி பரவும் வதந்திகள்... 'உறுதியோடு இருங்கள்'!! ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகைகள்!!
சமந்தா பற்றி பரவும் வதந்திகள்... 'உறுதியோடு இருங்கள்'!! ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகைகள்!!
நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) - நாக சைதன்யாவிடம் (Naga Chaitanya) இருந்து பிரிவதாக அறிவித்த பின்னர், என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர். இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து சமந்தா நேற்று வெளியிட்ட பதிவில், எனது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது குறித்து என் மீது அக்கறை காட்டும் அதே நேரத்தில் உண்மைக்கு மாறான பொய்யான கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த வதந்திகளுக்கு எதிராக என்னை பாதுகாக்க என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி, எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற்று தர மறுத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன, பிரிவு எனக்கு மிகுந்த வலியை அளித்துள்ளது, அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் வேண்டும், இதிலிருந்து நான் என்னைப் பாதுகாத்துக் கொள்வேனே தவிர ஒருபோதும் நான் உடைந்து விடமாட்டேன் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சமந்தா இந்த பதிவை போட்ட பின்பு, அடுத்தடுத்து பல நடிகைகள் சமந்தாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ஏற்கனவே சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து, பிரபல பாலிவுட் நடிகர் தான் சமந்தா - சைதன்யா பிரிவதற்கு காரணம் என காட்டமாக தெரிவித்திருந்த நிலையில், இவரை தொடர்ந்து சில நடிகைகளும் சமந்தாவிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங், மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர், சமந்தா உறுதியாக நீங்கள் இருக்க வேண்டிய நேரம் இது என்பது போல் தங்களது பதிவை போட்டுள்ளனர்.
நடிகைகள் மட்டும் இன்றி, ரசிகர்கள் பலரும் சமந்தாவின் இந்த விளக்கத்திற்கு பின்னர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்ப்பமுடிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.