- Home
- Cinema
- 12 பேரை காதலித்தும்; ஒரு லவ் கூட செட் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் ரஜினி, கமல் பட ஹீரோயின் பற்றி தெரியுமா?
12 பேரை காதலித்தும்; ஒரு லவ் கூட செட் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் ரஜினி, கமல் பட ஹீரோயின் பற்றி தெரியுமா?
தொழிலதிபர், சினிமா நடிகர் உள்பட 12 பேருடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்ட ரஜினி, கமல் பட ஹீரோயின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Manisha Koirala Love Life
சினிமாவில் ஹீரோயின்களின் வாழ்க்கை வித்தியாசமானது. சரியாக திட்டமிடாவிட்டால் ஏமாற நேரிடும். பல நடிகைகள் இதற்கு உதாரணம். 55 வயதில் தனிமையில் வாழும் நடிகையின் கதையும் அப்படித்தான். 12க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த, இவர், தமிழில் ஒரு படம் பிளாப் ஆனதும் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
12 பேருடன் காதல்
அந்த நடிகை வேறுயாருமில்லை... மனீஷா கொய்ராலா தான். பாலிவுட்டிலும் தென்னிந்திய திரையுலகிலும் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் தான் மனீஷா கொய்ராலா.1970ல் நேபாளத்தில் பிறந்த மனீஷா, 1991ல் 'சௌதாகர்' படத்தின் மூலம் அறிமுகமானார். 33 வருட சினிமா வாழ்க்கையில் பல அற்புதமான படங்களில் நடிதிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். திருமணத்திற்கு முன் 12 பேரை காதல் செய்ததாக செய்தி பரவியது. திருமணமாகி இரண்டு வருடங்களில் விவாகரத்து பெற்ற மனீஷா கொய்ராலா, 55 வயதில் தனிமையில் வாழ்கிறார்.
விவாகரத்து
நடிகை மனீஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக ஷங்கர் இயக்கிய இந்தியன் மற்றும் முதல்வன் படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதையடுத்து ரஜினியுடன் பாபா, கமலுடன் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்த, மனீஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை அடிக்கடி செய்திகளில் வந்தது. 2010ல் நேபாள தொழிலதிபர் சாம்ராட் தஹாலை மணந்தார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2012ல் விவாகரத்து பெற்றார். அன்று முதல் தனிமையில் வாழ்கிறார்.
மனீஷா கொய்ராலாவின் காதல்
மனீஷாவின் காதல் சம்பவங்கள் அவரது சினிமா வாழ்க்கையை விட பிரபலமானது. விவேக் மஷ்ரானுடன் முதல் காதல் தொடங்கியது. பின்னர் நானா படேகருடன் காதல் செய்ததாக செய்தி பரவியது. 1996ல் வெளியான 'அக்னி சாக்ஷி' படத்திற்கு பிறகு அவர்களது காதல் வலுவானது என்று கூறப்படுகிறது. நானா படேகரும் இதை ஒப்புக்கொண்டார். பின்னர் DJ ஹுசைனுடன் காதல் செய்ததாக தகவல் பரவியது.
பின்னர் நைஜீரிய தொழிலதிபர் செசில் அந்தோணியுடன் காதல். இதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் நடிகர் ஆர்யன் வைத், ஆஸ்திரேலிய தூதர் கிறிஸ்பின் கான்ராய் போன்றோருடன் காதல் செய்ததாக செய்தி வந்தது. இந்த பட்டியல் அங்கு நிற்கவில்லை. தொழிலதிபர் அஜிம் பிரேம்ஜியின் மகன் தாரிக் பிரேம்ஜி, மாடல் ராஜீவ் மூல்சந்தானி, இசையமைப்பாளர் சந்தீப் சௌதா, கிறிஸ்டோபர் டோரிஸ் ஆகியோரும் இதில் அடங்குவர். இவற்றில் சிலவற்றை மனீஷா ஒப்புக்கொண்டார், மற்றவை ஊடகங்களில் பரவிய வதந்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.