வசூலில் கடும் சரிவை சந்தித்த பொன்னியின் செல்வன்... விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா?
Ponniyin selvan : சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.30 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் மணிரத்னம். இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தியது.
இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து கடந்த வாரம் ரிலீசாக இருந்த சுந்தர் சி-யின் காஃபி வித் காதல், அருண் விஜய்யின் பார்டர், அரவிந்த் சாமியின் சதுரங்க வேட்டை 2, ஆர்.கண்ணன் இயக்கிய காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தன. இதனால் இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் மிகவும் சக்சஸ்புல்லாக ஓடிய இப்படம் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்துள்ளது.
இதையும் படியுங்கள்... ரூ.3500 கோடி சொத்துக்கு அதிபதி.. 7 பங்களா, 11 சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் அமிதாப் பச்சனின் மறுபக்கம்
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.30 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மொத்தமாக ரூ.5.10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து குறந்த வசூலை அள்ளியது நேற்றைய தினம் தான். இதனால் இப்படம் கமலின் விக்ரம் பட சாதனையை முறியடிக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வசூல் மந்தமடைந்து உள்ளதால் அந்த சாதனை எட்டுவது சற்று கடினம் என்றே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்னவேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் - சர்ச்சைகளுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்