‘நீ ஐஸ்வர்யா ராய் கூட பேசக்கூடாது’ மணிரத்னம் போட்ட கண்டிஷன்... மனம்திறந்த திரிஷா
பொன்னியின் செல்வன் படத்தின் கதைப்படி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் எதிரிகள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த திரிஷா, கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் வரிசையாக பிளாப் ஆகின. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 படத்துக்கு பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் சரிவர வெற்றி பெறாததால், கம்பேக் கொடுப்பதற்காக ஆவலோடு கதை கேட்டு வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் மூலம் தனது சினிமா கெரியர் மீண்டும் உச்சத்தை எட்டும் என மலைபோல் நம்பி உள்ளார் திரிஷா. அவரின் இந்த ஆசை நிறைவேறுமா என்பது வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தெரிந்துவிடும். அன்றைய தினம் தான் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா.
இதையும் படியுங்கள்... ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்யணும்ணு தோணுது- கோபத்தில் கொந்தளித்த கவுதம் மேனன்
பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதில் தவறாமல் கலந்துகொண்டு வரும் நடிகை திரிஷா, படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து, சக நடிகர், நடிகைகள் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சியில், நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பற்றி கூறி உள்ளார்.
இப்படத்தின் கதைப்படி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் எதிரிகள். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சியும் படத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் மிகுந்த நட்புடன் பழகி வந்தார்களாம். ஒருநாள் ஷூட்டிங் இடைவெளியின் போது இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த இயக்குனர் மணிரத்னம். இருவரிடமும் வந்து நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளக்கூடாதுனு சொல்லினாராம். இப்படி இருவரும் பேசினால் அது படத்தில் உங்கள் கேரக்டரை பாதிக்கும் என கூறினாராம்.
இதையும் படியுங்கள்... சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! விஜய் டிவி பிரபலங்கள் நேரில் வாழ்த்த