- Home
- Cinema
- சூர்யாவின் கஜினி படத்தில் மனசெல்லாம் சீரியல் நடிகை நடித்துள்ளாரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
சூர்யாவின் கஜினி படத்தில் மனசெல்லாம் சீரியல் நடிகை நடித்துள்ளாரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கஜினி திரைப்படத்தில் மனசெல்லாம் சீரியல் நடிகை நடித்து இருக்கும் தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கஜினி சூர்யா, அசின்
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் சூர்யாவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் கஜினி. இப்படத்தில் நடிகர் சூர்யா, முதல் பாதியில் சஞ்சய் ராமசாமியாகவும், இரண்டாம் பாதியில் கஜினியாகவும் இரு பரிணாமங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
கஜினி சூர்யா
கஜினி படத்தில் சின்ன குழந்தையாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சின்னத்திரையில் நாயகியாக நடித்து வருகிறார். அந்த நடிகை வேறுயாருமில்லை வெண்பா தான். இவர் கஜினி படத்தில் பள்ளி சிறுமியாக நடித்திருந்தார். கஜினி படத்தில் அசினின் ஓப்பனிங் சீனில் பள்ளி குழந்தைகளுக்கு உதவி செய்வார். அப்போது அவரது கன்னத்தில் ஒரு சிறுமி முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்துவார். அந்த சிறுமி தான் நடிகை வெண்பா.
இதையும் படியுங்கள்... 300 கோடியில் வீடு; கணவரை விட அதிகம் சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழும் இந்த நடிகை யார்?
கஜினி படத்தில் மன்செல்லாம் சீரியல் நடிகை
கஜினி படத்தில் சிறுமியாக நடித்த வெண்பா, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த காதல் கசக்குதய்யா படத்தில் நாயகியாக அறிமுகமானார். துவாரகேஷ் இயக்கிய அப்படத்தில் துருவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வெண்பா. இதையடுத்து வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த பள்ளி பருவத்திலே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த இரண்டு படங்களும் சரிவர போகாததால் சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு சின்னத்திரைக்குள் நுழைந்தார் வெண்பா.
கஜினி படத்தில் நடித்த வெண்பா
சின்னத்திரையில் தற்போது மனசெல்லாம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த சீரியலில் வெண்பாவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. இன்று சீரியலில் திறம்பட நடித்தாலும் அவருடன் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது கஜினி திரைப்படம் தான். அப்படத்திற்கு பின் படிப்படியாக நடிப்பில் மெருகேறி வருகிறார் வெண்பா.
இதையும் படியுங்கள்... ட்ரோன் மூலம் குழந்தையை காப்பாற்றிய ஷண்முகத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி? 'அண்ணா' சீரியல் அப்டேட்!