- Home
- Cinema
- ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட மம்மூட்டியின் மாஸ்டர் பீஸ் படம் ‘களம்காவல்’ - எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட மம்மூட்டியின் மாஸ்டர் பீஸ் படம் ‘களம்காவல்’ - எப்போ ரிலீஸ் தெரியுமா?
மம்மூட்டி மற்றும் விநாயகன் நடிப்பில், ஜிதின் கே ஜோஸின் இயக்குநராக அறிமுகமான களம்காவல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ள நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Kalamkaval OTT release date
மலையாளத்தில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படங்களில், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேரப் பெற்ற படம் 'களம்காவல்'. மம்மூட்டி மீண்டும் ஒரு புதிய இயக்குநருடன் இணைந்த இப்படத்தில், விநாயகம் தான் உண்மையான நாயகன். மம்மூட்டி வில்லன். டிசம்பர் 5 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மம்மூட்டி வில்லனாக நடிக்கிறார் என்பது உட்பட பல காரணங்களால், வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
களம்காவல் ஓடிடி ரிலீஸ்
முதல் காட்சிகளுக்குப் பிறகு நேர்மறையான விமர்சனங்கள் வந்ததால், படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. தற்போது இப்படம் ஓடிடி-க்கு வரவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 25-வது நாளில், படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான சோனி லிவ் மூலம் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும், தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படும். அநேகமாக ஜனவரி 9ந் தேதி இப்படம் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
ஹிட் அடித்த களம்காவல்
படத்தின் தற்போதைய உலகளாவிய வசூலை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர். மம்மூட்டி கம்பெனி பேனரில் மம்மூட்டியே இப்படத்தை தயாரித்துள்ளார். ஓடிடி வெளியீடு, மற்ற மொழி பார்வையாளர்களையும் சென்றடைய உதவும். மலையாளத்தைத் தொடர்ந்து, படத்தின் இந்தி டீசரையும் சோனி லிவ் வெளியிட்டுள்ளது. 'குருப்' படத்திற்கு கதை எழுதிய ஜிதின் கே ஜோஸின் இயக்குநராக அறிமுகமானம் படம் 'களம்காவல்'. ஜிதின் கே ஜோஸ் மற்றும் ஜிஷ்ணு ஸ்ரீகுமார் இணைந்து இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர்.
மாஸ் காட்டிய மம்மூட்டி
மம்மூட்டி கம்பெனி பேனரில் தயாரிக்கப்படும் ஏழாவது படம் இது. மம்மூட்டியின் நடிப்புடன், முஜீப் மஜீத்தின் இசையும் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். ஃபைசல் அலி இப்படத்தின் ஒளிப்பதிவாளர். மம்மூட்டி ஒரு சீரியல் கில்லராக நடித்துள்ள இப்படத்தில், விநாயகம் ஒரு ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவருக்கும் இடையிலான நடிப்புப் பரிமாற்றங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. இதை ரசிகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இந்த ஆண்டு வெளியான மற்றொரு மம்மூட்டி படமான 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீடு மிகவும் தாமதமானது. ஜனவரியில் திரையரங்குகளில் வெளியான இப்படம், டிசம்பரில்தான் ஓடிடி-யில் வெளியானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

