'மாமன்னன்' படத்தின் அடுத்தகட்ட பணியை துவங்கிய மாரிசெல்வராஜ்..! வைரலாகும் புகைப்படம் ..!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மாமன்னன்' படத்தின் அடுத்த கட்ட பணி, பரபரப்பாக துவங்கி உள்ளதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி விட்டதால், தன்னுடைய கடைசி திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் என்பதை அறிவித்தார்.
இந்த படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகள் மும்முறமாக துவங்கி துவங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளதாக நடிகர் வடிவேலுவின் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியான பின்னர் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.