- Home
- Cinema
- மஞ்சள் காமாலையால் இளம் இயக்குனர் பரிதாப பலி... முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சோகம்
மஞ்சள் காமாலையால் இளம் இயக்குனர் பரிதாப பலி... முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சோகம்
மலையாள திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வந்த ஜோசப் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த ஐ ஆம் கியூரியஸ் என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜோசப் மனு ஜேம்ஸ். இதையடுத்து இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் ஜோசப் மனு ஜேம்ஸ். பல்வேறு முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
ஜோசப் மனு ஜேம்ஸின் இயக்குனர் கனவு அண்மையில் நிறைவேறியது. அவர் நான்சி ராணி என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அஜு வர்கீஸ், அஹானா கிருஷ்ணா, லீனா, சன்னி வேய்ன், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கில் விபத்து... ஸ்டண்ட் சீனில் டூப் போடாமல் நடித்த நடிகர் விஜய் விஷ்வாவுக்கு கை முறிந்ததால் பரபரப்பு
இதனிடையே இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோசப் மனு ஜேம்ஸ் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 31. இளம் வயதில் இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மனுவின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை குருவிலங்காட்டில் நடைபெற்றன. இதில் அவரது திரையுலக நண்பர்களும் உறவினர்களும் கலந்துகோண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஜோசப் மனு ஜேம்ஸின் கனவு நனவாகிவிட்டாலும், அப்படம் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அவர் மரணமடைந்திருப்பது அப்படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... அவமானப்படுத்திய தயாரிப்பாளரை ஃபாரின் காரில் வந்து அலறவிட்ட சூப்பர்ஸ்டார்- முதல் காரில் ரஜினி செய்த மாஸ்சம்பவம்