எக்கச்சக்க கடன்... கண்ணீர் சிந்தும் ஜெயிலர் பட இயக்குனர் - கருணை காட்டுவாரா ரஜினிகாந்த்
கேரளாவில் 2 ஜெயிலர் படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் சக்கிர் மடதில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
Jailer
ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் வெளியாவது என்பது சினிமாவில் சகஜமான ஒன்று தான். ஆனால் ஒரே பெயர் கொண்ட இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது இதுவரை சினிமா வரலாற்றில் நடந்திராத ஒரு நிகழ்வு. அப்படி ஒரு சம்பவம் தான் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி நடக்க உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், கேரளாவில் சக்கிர் மடதில் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் என்கிற மலையாள படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன.
jailer
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் சக்கிர் மடதில் இயக்கியுள்ள மலையாள ஜெயிலர் திரைப்படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் அப்படம் கேரளாவில் மட்டும் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் கேரளாவில் மட்டும் வேறு பெயருடன் அப்படத்தை ரிலீஸ் செய்யுமாறு மலையாள ஜெயிலர் படக்குழு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது.
இதையும் படியுங்கள்... அரசியல் வேலைகளை பாதியில் நிறுத்திவிட்டு; திடீரென வெளிநாடு பறந்த விஜய் - பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா
ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் கேமியோ ரோலில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் அப்படத்துக்கு போட்டியாக அதே பெயருடன் தன் படம் ரிலீஸ் ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என சமீபத்திய பேட்டியில் மலையாள ஜெயிலர் படத்தின் இயக்குனர் சக்கிர் மடதில் உருக்கமாக பேசி இருக்கிறார்.
sakkir madathil
மேலும் அதில் அவர் கூறியதாவது : “நானும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் தான். அவர் படத்தை தான் முதலில் பார்க்க விரும்புவேன். இந்த ஜெயிலர் படத்தால் நான் மிகவும் கடனாளி ஆகிவிட்டேன். என்னுடைய வீடு, பிள்ளைகளின் நகை, கார் உள்ளிட்டவற்றை விற்று தான் இந்த ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறேன். இப்படத்தின் வெற்றியை நம்பிதான் என் வாழ்க்கையே இருக்கிறது. ரஜினி சார் நல்ல மனிதர், அவர் என் கஷ்டத்தை புரிந்துகொண்டு, டைட்டில் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என நம்புகிறேன்” என எமோஷனலாக பேசி உள்ளார். இதைப்பார்த்து ரஜினி கருணை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கைதி 2-வை தள்ளிப்போட்ட லோகேஷ்... வேறு இயக்குனருடன் கூட்டணி அமைத்து சம்பவம் செய்ய ரெடியான ரோலெக்ஸ் - டில்லி