கைதி 2-வை தள்ளிப்போட்ட லோகேஷ்... வேறு இயக்குனருடன் கூட்டணி அமைத்து சம்பவம் செய்ய ரெடியான ரோலெக்ஸ் - டில்லி
கைதி 2 திரைப்படம் தாமதம் ஆவதால் நடிகர் கார்த்தியும், நடிகர் சூர்யாவும், வேறு இயக்குனருடன் கூட்டணி அமைத்து சம்பவம் செய்ய ரெடியாகி உள்ளனர்.
suriya, karthi
தமிழ் சினிமாவில் செம்ம பார்மில் இருக்கும் இயக்குனர் என்றால் அது கார்த்தி தான். அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இதனால் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் ஏறி உள்ளது. அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
Karthi
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் தயாராகி உள்ளது. ராஜுமுருகன் இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவர் கைதி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் திடீர் டுவிஸ்ட் வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 2 நாள் சாப்பிட கூட காசு இல்லாமல் பட வாய்ப்பு தேடிய... சூரியின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Karthi, Premkumar
தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ரஜினி படத்திற்கான பணிகளில் இறங்க உள்ளதால், அவர் கைதி 2 திரைப்படத்தை தற்போது இயக்கும் ஐடியாவில் இல்லை. இதனால் சுதாரித்துக் கொண்ட நடிகர் கார்த்தி கைதி 2 படத்திற்காக வைத்திருந்த கால்ஷீட்டை வேறு இயக்குனருக்கு கொடுத்துவிட்டார். அந்த இயக்குனர் வேறுயாருமில்லை, 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தான்.
96 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் படம் இயக்காமல் இருந்த பிரேம் குமார் தற்போது கார்த்தி படம் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா தான் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கைதி 2 படத்திற்காக இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ரோலெக்ஸ் சூர்யாவும், டில்லி கார்த்தியும் தற்போது புது படத்தில் இணைந்து சம்பவம் செய்ய ரெடியாகி இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
இதையும் படியுங்கள்... 12 வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத அனுபவம்; வைரமுத்துவுக்கு மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!