ஜிவி பிரகாஷின் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மலையாள நடிகை
இடிமுழக்கம், 13 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ஜிவி பிரகாஷ், அடுத்ததாக கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ், சாம் ஆண்டன் இயக்கிய டார்லிங் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து திரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், செல்ஃபி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
நடிகரான பின்னரும் இசையமைப்பாளராக ஜொலித்து வரும் ஜிவி பிரகாஷுக்கு சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது சீனு ராமசாமி இயக்கியுள்ள இடிமுழக்கம் மற்றும் விவேக் இயக்கத்தில் தயாராகி உள்ள திரில்லர் படமான 13 ஆகிய இருபடங்களில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
இதையும் படியுங்கள்... விஜய் படத்துக்கே தண்ணிகாட்டிய தனுஷின் பொல்லாதவன்... ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக்வெட்டி கொண்டாடிய படக்குழு
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஜிவி. இவர் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் தயாரிக்க உள்ளது. பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தவரும் நாளை, சக்ரவியூகம் போன்ற படங்களை இயக்கியவருமான உதயபானு மகேஸ்வரன் இயக்க உள்ளார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கந்தசாமி பரதன் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் மயில்சாமி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... போனி கபூர் மகனுடன் காதல்... 49 வயதில் 2-வது திருமணத்துக்கு ஓகே சொன்ன மணிரத்னம் பட நடிகை