விஜய் சிறந்த நடிகர் இல்லை என விமர்சித்த மலையாள நடிகர்..!! பதிலடி கொடுத்த மெர்சல் வில்லன்..!!
தளபதி விஜய், (Vijay) சிறந்த நடிகர் இல்லை... அவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் (Super Star) அல்ல என்று விமர்சனம் செய்த பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு, (siddique) மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருந்த, ஹரிஷ் பேரடி (hareesh peradi) பதிலடி கொடுத்துள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் விஜய்க்கு எந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திதாவில் தளபதி விஜய்கான ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளனர். இவருடைய படங்கள் வெளியாகும் போது, பெரிய பெரிய கட் அவுட் வைத்து, திருவிழாவை போல் அன்றைய தினத்தை கொண்டாடி தீர்ப்பார்கள்.
vijay
இந்நிலையில், சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அழைத்த பிரபல சீரியல் நடிகர் சித்திக், விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றுவது போல் மிகவும் காட்டமாக தளபதி விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து அவர் பேசி இருந்தாவது, மலையாள திரையுலகம் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது. எனவே தான் மோகன் லால் மற்றும் மம்மூட்டி என இரண்டு சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளனர். ஆனால் விஜய்யை சிறந்த நடிகர் என கூறமுடியாது. அவர் சூப்பர் ஸ்டாரும் இல்லை, வேண்டும் என்றால் கமல்ஹாசனை சிறந்த நடிகர் என ஏற்று கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இவருடைய பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு மலையாள நடிகரும், மெர்சல் படத்தில் வில்லனுமான ஹரீஷ் பேரடி பதிலடி கொடுத்துள்ளார்.
இளம் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் தான் என தெரிவித்துள்ளார். அதே போல் அவர் சிறந்த நடிகர் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை என தன்னுடைய ஆதரவை விஜய்க்கு கொடுத்துள்ளார். ஒரு மலையாள நடிகர் விமர்சித்தாலும், மற்றொரு மலையாள நடிகர் தளபதிக்கு ஆதரவு கொடுத்துள்ளது, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைர்த்துள்ளது.
மலையாள நடிகர் ஹரிஷ் பேரடி, பல தமிழ் படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.