‘எனக்கு மட்டும் ஓட்டு போட்டால்’... பிரபல நடிகையின் அனல் தெறிக்கும் தேர்தல் பிரசாரம்!
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தின் கழக ஆட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று தான் என களமிறங்கியுள்ள கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. காலில் செய்துள்ள அறுவை சிகிச்சையை கூட பொருட்படுத்தாமல் கமல் ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்றிரவு மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்ரீப்ரியா அங்கிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது தொகுதியின் பிரச்சனைகள் அனைத்தையும் நிச்சயம் ஒவ்வொன்றாக செய்து முடிப்போம். ஒரு பெண்ணாக உங்களுடைய தொகுதி பிரச்சனைகளுக்கு நான் எப்போதும் குரல் கொடுப்பேன். தோற்றாலும் குரல் கொடுப்பேன். எனக்கு ஓட்டு போட்டு எம்எல்ஏ ஆக்கினீர்கள் என்றால் நான் சட்டமன்றத்தில் உங்கள் பிரச்சனைக்காக கர்ஜிப்பேன். ஆனால் எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் ‘மியாவ்’ என சின்னதாக தான் குரல் கொடுக்க முடியும் எனக்கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தில் மட்டும் தான் ஒரு திட்டமிருக்கிறது. உங்களுடைய எம்.எல்.ஏ. திருப்தியாக இல்லை என்றால் நீங்கள் புகார் கொடுத்தால் அவர்களை தூக்கியடித்துவிடுவார்கள். இந்த தமிழ்நாடு அனைவருக்கும் சொந்தம், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சொந்தம் என பேசினார்.
இந்த தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல்வாதி அல்லது அமைச்சர் ஏழையாக இருக்கின்றாரா? ஓட்டுப்போடும் நீங்கள்தான் ஏழையாக இருக்கின்றீர்கள். எனவே அதை சிந்தித்து பார்த்து ஓட்டு போடுங்கள். மக்கள் நீதி மையத்திற்கு ஆதரவு தாருங்கள் என வாக்கு சேகரித்தார்.