1000 கோடி பட்ஜெட் படத்திற்காக ராஜமெளலி பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் இதுதானா?
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் என்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

SSMB29 Title leaked
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் படம் எஸ்.எஸ்.எம்.பி 29. இதுவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களுக்குப் பிறகு உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார் ராஜமௌலி. மகேஷ் பாபு படத்தையும் உலகளவில் வெளியிட திட்டமிட்டு உள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகும். இது ஒரு ஃபாரஸ்ட் அட்வெஞ்சர் படமாக உருவாகி வருகிறது.
ராஜமெளலியின் அடுத்த பட டைட்டில் லீக்கானது
ராஜமௌலி இப்படத்தை 'குளோப் டிராட்டர்' என வர்ணிக்கிறார். சமீபத்தில் கென்யாவில் முக்கிய ஷெட்யூல் முடிந்தது. நவம்பரில் அப்டேட் வரும் என ராஜமௌலி அறிவித்துள்ளார். டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் அல்லது கிளிம்ப்ஸ் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜமெளலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'வாரணாசி' என்ற டைட்டிலை வைக்க படக்குழு பரிசீலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது.
ஷாக் ஆன ரசிகர்கள்
இது உண்மையானால் ராஜமௌலியின் முடிவு அதிர்ச்சியளிக்கும். உலகளவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். டைட்டில் உலக ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். 'வாரணாசி' என்பது இந்திய ரசிகர்களுக்குப் புரியும். ஆனால், இது ஆன்மீக டைட்டில் என்பதால் உலக ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படத்திற்காக அண்மையில் வாரணாசி நகரகத்தையே செட்டாக போட்டு ஷூட்டிங் நடத்தி இருந்தார் ராஜமெளலி.
ஃபாரஸ்ட் அட்வெஞ்சர் கதை
இப்படத்தில் இந்து புராணங்கள் மற்றும் ஆன்மீக கூறுகள் இருப்பதாக முன்பிருந்தே யூகங்கள் உள்ளன. மகேஷ் பாபு பிறந்தநாள் ப்ரீ-லுக்கில், அவரது கழுத்தில் நந்தி, திரிசூலம், டமருகம் ஆகியவை காணப்பட்டன. கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு நாட்டுப்புறப் பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்திய கலாச்சார கூறுகளை, உலகளாவிய ஃபாரஸ்ட் அட்வெஞ்சர் கதையில் ராஜமௌலி எப்படி இணைப்பார் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபு உடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.