ராஜமெளலியின் வாரணாசி படத்தை வாங்க தயக்கம் காட்டும் ஓடிடி தளங்கள்... காரணம் என்ன?
இந்திய திரையுலக வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகேஷ் பாபுவின் வாரணாசி திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அதன் ஓடிடி டீலிங் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Varanasi Movie OTT Rights
தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் பான்-வேர்ல்ட் படம் வாரணாசி. ரூ.1200-1500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி வியாபாரம் குறித்த சுவாரஸ்யமான செய்தி பரவி வருகிறது.
வாரணாசி ஓடிடி டீலிங்
வாரணாசியின் ஓடிடி உரிமத்திற்கு நெட்ஃபிளிக்ஸ் ரூ.650 கோடி வழங்கியுள்ளது. ஆனால் ராஜமௌலி இதை ஏற்காமல், ரூ.1000 கோடிக்கு விற்க இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை. தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஓடிடி தளங்கள் முதலீடு செய்வதில்லை. படம் ஹிட்டானால் மட்டுமே அதிக விலை கொடுக்கின்றன. ஆனால், ராஜமௌலி படம் என்பதால் வாரணாசிக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம்.
ஓடிடியில் சாதனை படைக்க காத்திருக்கும் வாரணாசி
ராம் சரணின் 'பெத்தி' பட ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் ரூ.130 கோடிக்கு வாங்கியுள்ளது. பிரபாஸின் 'ஸ்பிரிட்' படமும் படப்பிடிப்புக்கு முன்பே ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, கல்கி (ரூ.375 கோடி), கேஜிஎஃப் 2 (ரூ.320 கோடி), ஆர்ஆர்ஆர் (ரூ.300 கோடி) அதிக ஓடிடி விலைக்கு விற்கப்பட்டுள்ளன. வாரணாசி ரூ.1000 கோடிக்கு விற்கப்படலாம். அப்படி விற்கப்பட்டால், இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை வாரணாசி படைக்கும்.
வாரணாசி எப்போ ரிலீஸ்?
சமீபத்தில் வாரணாசி திரைப்படத்தின் டைட்டில் ரிவீல் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.25 கோடி செல்வளித்து இருந்ததாம் படக்குழு, இப்படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. அப்போது இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் ஒரு படைப்பாக வாரணாசி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

