பெயர் சர்ச்சையால் வாரணாசி படத்தின் டைட்டில் மாற்றம்: இதுதான் புதிய டைட்டில்!
Mahesh Babu and Rajamouli Varanasi Movie Title Changed : மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்திற்கு புதிய டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தான் வாரணாசி. இந்தப் படத்தை ஹிட் இயக்குநரான எஸ் எஸ் ராஜமௌலி இயக்குகிறார். மேலும், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன், ருத்ரா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காவிய சாகச திரைப்படமான இந்தப் படம் வரும் 2027 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
ரூ.1300 கோடி பட்ஜெட்
கிட்டத்தட்ட ரூ.1300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் டைட்டில் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
டைம் டிராவல் கதை
ஆப்பிரிக்க காடுகளில் கதை நடக்கிறது. இது ஒரு டைம் டிராவல் கதை. ராமாயணத்தின் லங்கா தகனம் முக்கிய அம்சம். இதில் மகேஷ் பாபு ராமனாக தோன்றுவார் என ராஜமௌலி கூறியுள்ளார். படம் ஹாலிவுட் தரத்தில் விஷுவல் விருந்தாக இருக்கும். `வாரணாசி` தலைப்பை ராமபக்த ஹனுமா நிறுவனம் முன்பே பதிவு செய்ததால் சர்ச்சை எழுந்தது. ராஜமௌலியும் இதே பெயரை அறிவித்ததால், தயாரிப்பாளர்கள் புகார் அளித்தனர்.
ராஜமௌலி வாரணாசி
இதன் காரணமாக இயக்குநர் ராஜமௌலி படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். மகேஷ் பாபுவின் `வாரணாசி` படத்தின் பெயர் `ராஜமௌலி வாரணாசி` என மாற்றப்பட உள்ளது. தெலுங்கில் இந்தப் பெயரில் வெளியாகும். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது ஒரே பாகமாக உருவாக இருக்கிறதாம். இந்தப் படத்தில் மகேஷ் பாபு 2 கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.