MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் கூலியை காலி பண்ணிய சிறு பட்ஜெட் படங்கள்... அதிக வியூஸ் அள்ளிட டாப் 5 மூவீஸ் லிஸ்ட் இதோ

ஓடிடியில் கூலியை காலி பண்ணிய சிறு பட்ஜெட் படங்கள்... அதிக வியூஸ் அள்ளிட டாப் 5 மூவீஸ் லிஸ்ட் இதோ

ஓடிடி தளங்களில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 30 2025, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 Most Watched Movies and Web Series on OTT
Image Credit : Google

Top 5 Most Watched Movies and Web Series on OTT

ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் தற்போது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலகளவில் எந்த மொழியில் வெளியாகும் படங்களாக இருந்தாலும் சரி அதை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வசதி ஓடிடி மூலம் கிடைத்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களே ஒரு மாதத்தில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிவிடுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 22ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிக பார்வைகளை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சரிவை சந்தித்த கூலி
Image Credit : instagram

சரிவை சந்தித்த கூலி

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் சன் ஆஃப் சர்தார் 2 திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்திற்கு 19 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இந்த வாரம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கடந்த வாரம் மட்டும் 30 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 11ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

34
டாப் 3 படங்கள் என்னென்ன?
Image Credit : Social Media

டாப் 3 படங்கள் என்னென்ன?

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் பிடித்துள்ளது. மோகன்லால் உடன் மாளவிகா மோகனன் நடித்த இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 34 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் வரை முதலிடத்தில் இருந்த சையாரா என்கிற இந்தி திரைப்படம். இந்த வாரம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் அப்படத்திற்கு 45 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை மகாவதார் நரசிம்மா திரைப்படம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 57 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.

44
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் சீரிஸ்
Image Credit : Instagram

அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் சீரிஸ்

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் பட்டியலில், வெட்னஸ்டே என்கிற வெப் தொடரின் 2வது சீசன் 5வது இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிஸுக்கு 8 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் தமன்னா நடித்த Do You Wanna Partner என்கிற வெப் சீரிஸ் உள்ளது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த தொடருக்கு 13 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் 18 லட்சம் வியூஸ் உடன் சிக்சஸ் சீசன் 2 வெப் தொடர் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் தி டிரெயல் சீசன் 2 வெப் தொடர் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள இந்த வெப் தொடர் 28 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. முதலிடத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய The Bads of Bollywood என்கிற வெப் தொடர் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடருக்கு 57 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Related Stories
Recommended image1
இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ? படக்குழு கொடுத்த அடிபொலி அப்டேட்
Recommended image2
Ghaati OTT: அனுஷ்கா ஷெட்டி மிரட்டல் நடிப்பில் வெளியான 'காட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved