- Home
- Cinema
- Ghaati OTT: அனுஷ்கா ஷெட்டி மிரட்டல் நடிப்பில் வெளியான 'காட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Ghaati OTT: அனுஷ்கா ஷெட்டி மிரட்டல் நடிப்பில் வெளியான 'காட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
Ghaati OTT Release: நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன, 'காட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அனுஷ்கா நடிப்பில் வெளியான காட்டி:
தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி, 'மிஸ்டர் ஷெட்டி மிஸ்ஸஸ் பொலிஷெட்டி' திரைப்படம் வெளியாகி சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், நடித்திருந்த திரைப்படம் தான் 'காட்டி'. இயக்குனர் கிருஷ் இயக்கி இருந்த இந்த படத்தை, ராஜீவ் ரெட்டி, வம்சி பிரமோத் ஆகியோர் தயாரித்திருந்தார். அனுஷ்காவுக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்திருந்தார். செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த படம், அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நடிப்பில் ஸ்கோர் செய்த அனுஷ்கா:
இந்த படத்தின் மூலம், அனுஷ்கா ஷெட்டி மீண்டும் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களை மிரளவைத்திருந்தாலும், கதை களத்தில் ஏற்பட்ட தொய்வு தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. 'காட்டி' படத்தின் முதல் பாகம் உணர்வு பூர்வமாக இருந்ததால்.... அனுஷ்காவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். அதே போல் இந்த படத்தின் இரண்டாம் பாதி அதிரடி நிறைந்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு! பாராட்டும் ரசிகர்கள்!
காட்டி ஓடிடி ரிலீஸ்:
இந்த நிலையில் தான், தற்போது 'காட்டி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது வரும் 26-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாம்.
ஓடிடியில் ரசிகர்களை கவருமா?
அனுஷ்காவுடன் இணைந்து, விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு, சைதன்ய ராவ் போன்றோர் பலர் நடித்துள்ளனர். ஒரு சில படங்கள் திரையரங்குகளில் தோல்வியை சந்தித்தாலும், ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. அதே போல், 'காட்டி' திரைப்படமும் ஓடிடியில் ரசிகர்கள் மனதை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.