MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீனாவில் மகாராஜா செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்; ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் காலி!

சீனாவில் மகாராஜா செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்; ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் காலி!

Maharaja box office Collection in China : ரஜினிகாந்த் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை விஜய் சேதுபதியின் மகாராஜா படம் முதல் வாரத்திலேயே முறியடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 02 2024, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maharaja in China

Maharaja in China

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை நிதிலன் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் சாச்சனா விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். மேலும் திவ்ய பாரதி, அபிராமி, அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Maharaja movie

Maharaja movie

இப்படம் ரூ.110 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. தியேட்டரில் சக்கைப்போடு போட்ட இப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் உலகம் முழுவதும் மகாராஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டவர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்திருந்ததால், இப்படத்தை உலகளவில் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் பணிகளில் படக்குழு இறங்கியது. அதன்படி முதலாவதாக சீனாவில் இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பெண்ணை பொதுவெளியில் கேவலப்படுத்துவது தொகுப்பாளருக்கு அழகா? விஜய் சேதுபதியை விளாசிய பிரபலம்

34
Maharaja movie Box Office in China

Maharaja movie Box Office in China

சீனாவில் ரஜினியின் 2.0 திரைப்படம் 10 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆனதே சாதனையாக கருதப்பட்ட நிலையில், அதை மிஞ்சும் வகையில் மகாராஜா திரைப்படம் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதன் ப்ரீமியர் ஷோவிற்கே மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களிலேயே சீனா மக்களிடையே மாஸ் வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

44
2.0 Box Office in China

2.0 Box Office in China

அதன்படி முதல் நாளில் ரூ.5.38 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் ரூ.13.76 கோடியை வாரிக்குவித்தது. பின்னர் மூன்றாம் நாள் முடிவில் ரூ.7.12 கோடி வசூலித்து இதுவரை 26.55 கோடி வசூலித்து இருக்கிறது. இதுவரை சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் படைத்திருந்தது. அப்படம் ரூ.33 கோடி வசூலித்தது. அப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை மகாராஜா திரைப்படம் நான்கு நாட்களில் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிருச்சு: சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்துக்கு நேட்டிவா விருது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved