நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிருச்சு: சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்துக்கு நேட்டிவா விருது!
Sivakarthikeyan Kottukkaali Won Nativa Awards : கொட்டுக்காளி படத்துக்கு நேட்டிவா விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
Kottukkaali won Native Awards, ALTERNATIVA FILM AWARDS & FESTIVAL 2024
Sivakarthikeyan Kottukkaali Won Nativa Awards : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இப்போது வளர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். தொட்டது எல்லாம் வெற்றி கொடுக்க தொடங்கிவிட்டது. அமரன் படத்தை ஹிட் கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் உலகம் முழுவதும் ரூ.325 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
ALTERNATIVA FILM AWARDS & FESTIVAL 2024
2024ல் ஹிட் கொடுத்த பிளாக்பஸ்டர் தமிழ் படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும், கோட் படத்திற்கு பிறகு அதிக வசூல் குவித்த 2ஆவது தமிழ் படம் என்ற சாதனையையும் அமரன் படைத்துள்ளது. ஒரு நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முக கலைஞராக திகழும் சிவகார்த்திகேயன் எஸ்கே புரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
kottukkaali first look teaser anna ben actor soori sivakarthikeyan sk productions nsn
இந்நிறுவனத்தின் மூலமாக சூரியை வைத்து எடுக்கப்பட்ட படம் கொட்டுக்காளி. இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. 21 வயதான இளம் பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பையனைக் காதலிக்கிறாள். இந்த காதல் வீட்டிற்கு தெரிய கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் மந்திர தந்திரத்தால் அந்த பையனை மறக்க அருகிலுள்ள கிராமத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.
Kottukkaali Won Native Awards
இதையடுத்து அந்தப் பெண்ணிற்கு மாந்திரீகம் செய்யப்பட்டதா, அந்த பையனின் நினைவுகள் அழிக்கப்பட்டதா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தின் கிளைமேக்ஸை பொதுமக்களுக்கு விட்டு விட்டனர். இது தான் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட கதையை மையப்படுத்திய கொட்டுக்காளி தற்போது சர்வதேச விருது ஒன்றை வென்றுள்ளது.
Kottukkaali Movie
இந்தோனேஷியாவில் நடைபெற்ற அல்டர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் பல மொழிகளில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக சூரியின் கொட்டுக்காளி படம் தேர்வு செய்யப்பட்டு நேட்டிவா விருது வழங்கப்பட்டது.
Sivakarthikeyan Kottukkaali Movie
ஏற்கனவே அமரன் படத்தால் ஒட்டுமொத்த உலகமும் சிவகார்த்திகேயனை கொண்டாடி வரும் நிலையில் இப்போது அவர் தயாரிப்பில் வந்த படத்துக்கு நேட்டிவா விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: கொட்டுக்காளி படம் நேட்டிவா விருது வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது பயணத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.