MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் ஹீரோ ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்து!

'மகாநதி'  சீரியலில் ஹீரோக்களில் ஒருவராக நடித்து வரும் ருத்ரன் பிரவீனுக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 17 2024, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rudran Praveen Serial

Rudran Praveen Serial

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'மகாநதி'. இந்த தொடரை ராஜா ராணி,  பாரதி கண்ணம்மா, போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பெனன்ட் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சுஜாதா சிவக்குமார், லட்சுமி பிரியா, சாமிநாதன், அனந்தராமன், ருத்ரன் பிரவீன், தாரணி, குமருதீன், பேபி காவியா, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகர் சரவணன்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mahanathi Serial

Mahanathi Serial

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. ஒரு வருடத்தை கடந்து தற்போது வரை ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத திருப்பு முனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், காவேரி - நிவின் காதல் காட்சிகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

ஒரே நாளில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்!

35
Rudran and Laxmi Priya Pair

Rudran and Laxmi Priya Pair

காவேரி, விஜய்யை திருமணம் செய்தது.. ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று என்றாலும் கூட இவர்கள் இருவரின் காம்போவும் ரசிக்கும் படியாக உள்ளது. அதே சமயம் நிவின் காவேரிக்காக காத்திருக்க போகிறாரா? அல்லது காவேரியின் தங்கை யமுனாவின் காதலை ஏற்று கொள்ள போகிறாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

45
Rudran Praveen Married to Pavithra

Rudran Praveen Married to Pavithra

'மகாநதி' சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள, நிவினுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பவித்ரா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில்.. தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ருத்ரன் பிரவீனுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வசூலில் 'தங்கலானை' மிஞ்சிவிட்டதா 'டிமான்டி காலனி 2'? 2-வது நாள் வசூல் விவரம்!

55
Rudran Praveen blessed Girl baby

Rudran Praveen blessed Girl baby

ருத்ரன் பிரவீன், ஏராளமான குறும்படங்களில் நடித்து பிரபலமானவர். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என நினைத்த இவருக்கு... உயிரே போகும் அளவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால், தன்னுடைய கவனத்தை சினிமா மீது திருப்பினார். இந்த சீரியல் வாய்ப்பும் இவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. 50 மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டு.. பல துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னரே பிரவீன் பெனென்ட் கொடுத்த வாய்ப்பால் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Recommended image2
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!
Recommended image3
Pandian Stores 2 : லஞ்சம் வாங்கியது அம்பலம்... அதிகாரிகளிடம் எஸ்கேப் ஆகி மீனாவிடம் மாட்டிக்கொண்ட செந்தில்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved