அஜித் ரசிகர்களின் அட்டகாசம்... சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
விஜய், அஜித் ஆகியோருக்கும் அரசியல் வாசகங்களுடன் ஒட்டப்படும் போஸ்டர்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டுவதில் மதுரைவாசிகள் எப்போதுமே கில்லாடிகள். பிளாக்ஸ், கட் அவுட், பேனர் என விதவிதமாக வைத்து தெறிக்கவிடுவார்கள். அப்படி அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு ஒட்டப்படும் சில போஸ்டர்களால் சர்ச்சையும் வெடிப்பது உண்டு.
சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் ஊர் முழுவதும் ஓட்டிய #Suriya40 பட போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அதேபோல் விஜய், அஜித் ஆகியோருக்கும் அரசியல் வாசகங்களுடன் ஒட்டப்படும் போஸ்டர்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.
தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை பட அப்டேட் கேட்டும் மதுரை ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்களை ஓட்டி அலப்பறை செய்தனர். தற்போது அந்த வரிசையில் தல அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மே 1ம் தேதி வர உள்ள தல அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை முழுவதும் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் சர்ச்சைக்குரிய அரசியல் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் ‘வெற்றி நடைபோட்டாலும் சரி, விடியல் தந்தாலும் சரி, இதெல்லாம் உங்கள் த(லை) அசைவில் மட்டுமே சாத்தியம்’ போன்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.