ரோல்ஸ் ராய்ஸ் காரை விட அதிகம்; நடிகர் மாதவன் வாங்கிய காஸ்ட்லி Boat - விலை இத்தனை கோடியா?
துபாயில் புதிதாக படகு ஒன்றை வாங்கி உள்ள மாதவன், அதில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார்.
Madhavan Wife Saritha
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் மாதவன். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் தான் மாதவனுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாதவன்.
Test Movie
அவர் இயக்கிய முதல் படமே வெற்றியடைந்ததோடு அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. தற்போது தமிழில் நடிகர் மாதவன் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அதில் ஒரு படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குகிறார். அதிர்ஷ்டசாலி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர டெஸ்ட் என்கிற தமிழ் படத்திலும் நடித்து முடித்துள்ளார் மாதவன். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 2025 புத்தாண்டை நடிகரின் குடும்பத்தோடு கொண்டாட வெளிநாடு பறந்த நயன் - விக்கி! வைரலாகும் புகைப்படம்!
Madhavan New year Celebration
டெஸ்ட் திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக குமுதா என்கிற கேரக்டரில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் இந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் படத்தின் மூலம் நயன்தாராவுக்கும் மாதவனுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மையில் புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு வந்திருந்த நயன்தாராவை தன்னுடைய படகுக்கு அழைத்து சென்றிருக்கிறார் மாதவன்.
Nayanthara Celebrate New Year in Madhavan new Yatch
துபாயில் சொந்தமாக படகு ஒன்றை வாங்கி இருக்கிறார் மாதவன். அந்த படகில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் ஜோடியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது படகின் வெளிப்புரத்தில் விக்கி - நயன் உடன் மாதவனும் அவரது மனைவி சரிதாவும் ஜோடியாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.
துபாயில் மாதவன் வாங்கி உள்ள சொகுசு படகின் விலை ரூ.14 கோடியாம். அதிநவீன வசதிகளுடன் கூடிய அந்த படகை தான் ஓய்வு எடுப்பதற்காகவும், ஏதேனும் ஸ்கிரிப்ட் எழுதும் பணி இருந்தால் அதை அங்கு மேற்கொண்டும் வருகிறாராம் மாதவன். இந்த படகை இயக்குவதற்கான லைசென்சையும் மாதவன் வாங்கி உள்ளாராம். இதற்காக 6 மாதம் பயிற்சி பெற்று அவர் லைசன்ஸ் வாங்கி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மாதவன் வாங்கிய படகின் விலை ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை விட அதிகமா என வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... புர்ஜ் கலீபா முன்பு கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா! வைரல் போட்டோ!