- Home
- Cinema
- சினிமா பிரபலத்தை 2வது திருமணம் செய்யப்போகிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? புயலை கிளப்பிய போட்டோஸ்
சினிமா பிரபலத்தை 2வது திருமணம் செய்யப்போகிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? புயலை கிளப்பிய போட்டோஸ்
Madhampatty Rangaraj : நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவரை விவாகரத்தான சினிமா பிரபலம் ஒருவர் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

Madhampatty Rangaraj
புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். முதல்வர் முதல் பிரதமர் வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் ரங்கராஜ். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் இல்லத் திருமண விழாவில் அண்மையில் கேட்டரிங் சர்வீஸ் செய்து அசத்தி இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இதுதவிர இவருக்கு சொந்தமான ஹோட்டல் அமெரிக்காவிலும் இயங்கி வருகிறது. அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் அங்கு பரிமாறப்படுகின்றன.
Actor Madhampatty Rangaraj
சமையல் கலையில் வல்லவரான இவருக்கு சினிமா மீதும் ஆர்வம் உண்டு. அந்த ஆசையில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மெகந்தி சர்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கெடுத்து இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். கடந்த சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதால் அவருக்கு பதில் ரங்கராஜ் களமிறக்கப்பட்டார்.
Madhampatty Rangaraj, Joy Crizildaa
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன. சினிமாவுக்கு வந்து பிரபலமாகிவிட்டாலே அவர்களை பற்றி கிசுகிசுக்கள் வந்துவிடும். அந்த வகையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜும் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். அதன்படி மாதம்பட்டி ரங்கராஜும் அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறி நெட்டிசன்கள் சில இன்ஸ்டா பதிவுகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வரிசைகட்டி நிற்கும் சொகுசு கார்கள்.. பிரைவேட் ஜெட் வாங்க வேலை நடக்குது - கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!
Joy Crizildaa Mentioned as Joy Rangaraj
சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசல்டா, மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஸ்டாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதனிடையே ஜாய் கிரிசல்டா தன்னுடைய் இன்ஸ்டா பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்த புகைப்படங்களை ஹார்டின் எமோஜிகளோடு பதிவிட்டுள்ளது மட்டுமின்றி அண்மையில் காதலர் தினத்தை அவருடன் தான் கொண்டாடியதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Joy Crizildaa Instagram Story
மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் இனிப்பகத்தில் இருந்து பிரபலங்கள் சிலருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பிவிட்டுள்ள ஜாய் கிரிசல்டா, அதில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாக குறிப்பிட்டு ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜாய் கிரிசல்டாவின் இந்த அடுக்கடுக்கான இன்ஸ்டா பதிவால் குழம்பிப் போய் உள்ள நெட்டிசன்கள் இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி வருவதால் மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் கொடுத்தால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இதையும் படியுங்கள்... சொந்த ஊரில் பிரம்மாண்ட கனவு இல்லம்.. பார்த்து பார்த்து புதிய வீட்டை கட்டி வரும் மாதம்பட்டி ரங்கராஜ்..