‘பத்து தல’ படத்துக்காக தேசிய விருது வென்ற பிரபலத்தை தட்டித்தூக்கிய சிம்பு- மீண்டும் ஒர்க் ஆகுமா மாநாடு மேஜிக்!
பத்து தல படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்பு, தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் கைவசம் கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல, கோகுலின் கொரோனா குமார் போன்ற படங்கள் உள்ளன.
இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகி உள்ளார். சிம்புவின் மாநாடு படத்துக்கும் இவர் தான் படத்தொகுப்பு செய்திருந்தார். அதே மேஜிக் பத்து தல படத்தில் ஒர்க் அவுட் ஆகிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் ஆரண்ய காண்டம் படத்துக்காக தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.