தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாத்துனது வடிவேலு தான்... மாரி செல்வராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்
மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தற்கொலைக்கு முயன்ற தன்னை காப்பாற்றியது வடிவேலு தான் என நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் மாமன்னன். உதயநிதியின் கடைசி படம் என்பதால் இதனை மிகப்பெரிய பொருட்செலவில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். சமூக நீதியையும், சமத்துவத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
maamannan
மாமன்னன் திரைப்படம் வெளியாகி 2 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உதயநிதியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகவும் மாமன்னன் மாறி உள்ளது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி இப்படம் இதுவரை ரூ.52 கோடி வசூலித்துள்ளதாகவும், அடுத்த வாரம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... சீரியலில் வில்லன்; நிஜத்தில் பிசினஸ்மேன்.. யார் இந்த எதிர்நீச்சல் எஸ்.கே.ஆர்? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்
maamannan
அந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு ஷாக்கிங் தகவல் ஒன்றை கூறினார். அதன்படி அவர் பேசியதாவது : “நான் நிறையநாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கேன். அப்படி ஒருநாள் தற்கொலைக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது அங்கே டிவியில் வடிவேலுவின் காமெடி ஓடிக் கொண்டு இருந்தது. அந்த காமெடி என் மனதை மாற்றியது.
maamannan
அந்த காமெடி பார்த்த பின்னர் அது என்னை வேறு ஒரு மாரியாக மாற்றியது. பின்னர் தான் சென்னைக்கு போக வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு வந்தது” என அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார் மாரி செல்வராஜ். அவரின் இந்த பேச்சைக் கேட்டு வடிவேலு நெகிழ்ந்து போனார். பின்னர் அருகே வந்த உதயநிதி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். மாரி செல்வராஜின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... முதலில் Haldi விழா.. பிறகு தேவாலயத்தில் திருமணம் - காதலனை கரம்பித்தார் சின்னத்திரை நாயகி சந்தியா!