இந்த ஆண்டு துவக்கத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

கேரளாவில் பிறந்து தொடக்கத்தில் பல இசை ஆல்பங்களில் நடித்து, பிறகு கோகுலத்தில் சீதை என்ற சீரியல் மூலமாக தமிழ் மக்களின் நெஞ்சத்தில் புகுந்தவர் தான் சந்தியா ராமச்சந்திரன். தெய்வம் தந்த பூவே சீரியல் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. இதனை தொடர்ந்து சந்தியா தவமாய் தவமிருந்து என்ற நாடகத்தில் நடிக்க துவங்கினார். 

View post on Instagram

அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரபல சின்னத்திரை நடிகர் பிரிட்டோ மனோ, தற்பொழுது ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தவமாய் தவமிருந்து நிகழ்ச்சியில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் ஒன்றாக நடித்த காலத்திலிருந்தே இவர்கள் இருவரிடையே காதல் மலர்ந்தது. 

தளபதி 68 அப்டேட் இதோ.. படத்தில் இணைந்த கேப்டன் மில்லர் பட கலைஞர் - குஷியில் ரசிகர்கள்!

இந்த ஆண்டு துவக்கத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் இல்லாமல் தங்கள் நண்பர்களுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது. 

View post on Instagram

தங்கள் திருமணத்தில் நடந்த Haldi விழா வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தியா வெளியிட்டிருந்தார். அதன் பிறகு மணமகன் பிரிட்டோ மத வழக்கப்படி தேவாலயத்தில் இவர்களுடைய திருமணம் இனிதே நடந்து முடிந்தது. பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சீரியலில் வில்லன்; நிஜத்தில் பிசினஸ்மேன்.. யார் இந்த எதிர்நீச்சல் எஸ்.கே.ஆர்? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்