தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் பல ஆங்கிலம் மற்றும் கன்னட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

தளபதி விஜயின் 67வது திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது, விஜய் தனது டப்பிங் பணிகளை இந்த படத்திற்காக முடித்துள்ள நிலையில், VFX பணிகளை மேற்கொள்ள விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளிநாடுகளுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றளவும் இந்த திரைப்படத்தில் முழுமையாக எத்தனை பேர் நடிக்கிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. 

அந்த அளவிற்கு லியோ திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது தளபதி 68 திரைப்படத்தை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிவுள்ளது. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி நடிக்கும் 68வது படம் உருவாகி வருகின்றது, அந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மாட்டிக்கிட்ட பங்கு... ஜவான் படத்துக்காக இத்தனை படங்களில் இருந்து காப்பி அடித்துள்ளாரா அட்லீ!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் பல ஆங்கிலம் மற்றும் கன்னட படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது நேர்த்தியான ஒளிப்பதிவியற்காக பெரும் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று வரும் நுனி, தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Scroll to load tweet…

இந்த திரைப்படத்திற்காக நடிகர் விஜய் சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறவுள்ளார் என்று கூறப்படுகிறது. வெங்கட் பாபு தற்போது திரைக்கதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார். லியோ பட வேலைகள் முடிந்து, 3 மாத ஓய்வுக்கு பிறகு தனது 68வது பட வேலைகளில் அவர் ஈடுபடுவர் என்று கூறப்படுகிறது.

மாட்டிக்கிட்ட பங்கு... ஜவான் படத்துக்காக இத்தனை படங்களில் இருந்து காப்பி அடித்துள்ளாரா அட்லீ!