- Home
- Cinema
- Maamanithan Release Date : இளையராஜா - யுவன் சங்கர் இணைந்த மாமனிதன் ..விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் தேதி
Maamanithan Release Date : இளையராஜா - யுவன் சங்கர் இணைந்த மாமனிதன் ..விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் தேதி
Maamanithan Release Date : விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு தற்போது திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Maamanithan
தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் உருவான மாமனிதன் தற்போது மாமனிதன் படத்தை நடித்து முடித்துள்ளார்.
Maamanithan
‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப்பின் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் ‘மாமனிதன்’.
MAAMANITHAN
கடந்த 2019-ம் ஆண்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்தது. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார்.
MAAMANITHAN
இதுவரை தனித்தனியாக முன்னை நாயகர்களுக்கு இசையமைத்து ரசிகர்ளை கவர்ந்து வந்த இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இந்த படத்தில் இசையமைத்துள்ளனர்.
maamanithan
இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் தான் தயாரித்து உள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
maamanithan
சாமானியனின் வாழ்க்கை ஓட்டத்தை சொல்லும் இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ளார்.
maamanithan
மாமனிதன் படத்திலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் டீசர் வெளியானது. தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Maamanithan
விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு தற்போது திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் மே 6-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.