மீண்டும் தள்ளிப்போன மாமனிதன்..ரிலீஸ் தேதி மூன்றாவது முறையாக மாற்றம்..
விஜய் சேதுபதியின் நீண்ட நாள் காத்திருப்பான மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Maamanithan
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி 4-வது முறையாக விஜய் சேதுபதியை இயக்கியுள்ள படம் தான் மாமனிதன்.
Maamanithan
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
Maamanithan
கடந்த 2019-ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக பட ரிலீஸ் தள்ளிபோகி உள்ளது.
MAAMANITHAN
இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள ஆர்.கே.சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அறிவித்தனர். அதன்படி வருகிற மே மாதம் ஏப்ரல் 28-ந் தேதி மாமனிதன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
Maamanithan
பின்னர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் இந்த மாத இறுதியில் வெளியாவதால் விஜய் சேதுபதியின் மற்றோரு படமான இந்த படத்தின் வசூல் பாதிக்கும் என கருதிய படக்குழு மீண்டும்ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. மே 6- தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
MAAMANITHAN
இதற்கிடையே இந்த படத்திலிருந்து ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதன்படி இரு பிள்ளைகளுடன் அன்பான குடும்பத்தை நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுநராக வருகிறார் விஜய் சேதுபதி
maamanithan
பின்னர் கூடாத சகவாசத்தால் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக என கூறி பணம் சேர்க்க தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார். இதனால் குடும்பத்தை பிரிந்து சுற்றி திரிகிறார் நாயகன். இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
maamanithan
இந்நிலையில் சுரேஷ் காமாட்ஷி வெளியிட்ட பதிவில் மாமனிதன் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதாக கூறியுள்ளார். அதோடு 400 திரையரங்குகளில் வெளியாக புக் ஆனா இந்த படம் ஜூன் 24-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.