MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல்களில் ஒரு சென்டிமென்ட் ஒளிந்திருக்கிறது. அது என்ன செண்டிமெண்ட் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 07 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vaali and AR Rahman Secret of Success
Image Credit : X

Vaali and AR Rahman Secret of Success

கவிஞர் வாலி அதிக பாடல்கள் எழுதிய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர். இவர்கள் காம்போ என்றால் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் என்றே சொல்லலாம். ஜென்டில்மேன் தொடங்கி வாலி கடைசியாக பாடல் எழுதிய மரியான் வரை இவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் அடிபொலி ஹிட் அடித்துள்ளன. வாலி எழுதிய பாடல்கள் சிலவற்றை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய சொந்த குரலிலேயே பாடியும் இருக்கிறார். அப்படி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, அவரே பாடிய பாடல்களில் கவிஞர் வாலி ‘M’ சென்டிமென்டை கடைபிடித்து வந்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

24
வாலியின் சென்டிமென்ட்
Image Credit : Asianet News

வாலியின் சென்டிமென்ட்

ஏ.ஆர்.ரகுமான் பாடி ஹிட் அடித்த பாடல்களில் முஸ்தபா முஸ்தபா, முக்காலா முக்காபுலா போன்ற சூப்பர் ஹிட் பாடல்களும் அடங்கும். அப்பாடல்கள் M என்ற எழுத்தில் தான் தொடங்கும். இதுதவிர வேறு எழுத்தில் தொடங்கும் பாடல்களிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். குறிப்பாக அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெறும், எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என்கிற பாடலையும் ஏ.ஆர்.ரகுமான் தான் பாடி இருப்பார். ஆனால் இப்பாடலும் Mல் தான் தொடங்கும். முன்னால் முன்னால் முன்னால் வாடா... உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா என்கிற வரிகளில் தான் இப்பாடல் தொடங்கி இருக்கும்.

Related Articles

Related image1
எம்.ஜி.ஆரிடம் வாலி ஆடிய 'டபுள் கேம்'! புரட்சி தலைவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா வித்தக கவிஞர்?
Related image2
பாடலிலேயே மகாபாரதத்தின் கதையை சொன்ன வாலி.. மணிரத்னம், இளையராஜா காம்போவில் 'தளபதி எனும் காவியம்'..
34
ஏ.ஆர்.ரகுமான் - வாலி கூட்டணி
Image Credit : X

ஏ.ஆர்.ரகுமான் - வாலி கூட்டணி

அதேபோல் காதலன் படத்தில் இடம்பெறும் ஊர்வசி ஊர்வசி பாடலும் வாலி எழுதியது தான். அப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் தான் பாடி இருந்தார். இப்பாடலும் மருஹபா என்று தான் தொடங்கும். இப்பாடல் உருவானதன் பின்னணியின் ஒரு குட்டி ஸ்டோரியும் இருக்கிறது. இப்பாடல் வெளிவந்த சமயத்தில், கவிஞர் வாலி மீது நடிகை ஊர்வசி கடும் கோபத்தில் இருந்தார். அவர் தன்னுடைய படத்தில் எழுதிய பாடல் வரிகள் ஊர்வசிக்கு நெருடலாக இருந்ததாம், அவரை சமாதானப்படுத்தும் விதமாக தான் ஊர்வசி ஊர்வசி பாடலில் டேக் இட் ஈஸி ஊர்வசி என எழுதி இருந்தாராம் கவிஞர் வாலி.

44
பாடல் ரகசியம்
Image Credit : Facebook

பாடல் ரகசியம்

இதுதவிர சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெறும் நியூயார்க் நகரம் பாடலையும் வாலி தான் எழுதி இருந்தார். இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார். இப்பாடலை M என்ற ஹம்மிங்கோடு தொடங்கி இருப்பார் ஏ.ஆர்.ரகுமான். இப்பாடல் உருவானதன் பின்னணியின் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. இப்பாடலில் நியூயார்க் நகரத்தை வர்ணித்து சில வரிகள் எழுதி இருப்பார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் கவிஞர் வாலி தன் வாழ்நாளில் ஒருமுறை கூட நியூயார்க் சென்றதில்லையாம். அங்கு சென்று பார்க்காமலேயே அப்பாடலை அழகாக செதுக்கி இருந்தார் வாலி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
Recommended image2
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
Recommended image3
கல்யாணமாகி 4 பிள்ளைங்க இருக்கு... வேற என்ன? திரிஷா போட்ட நெத்தியடி பதிவு
Related Stories
Recommended image1
எம்.ஜி.ஆரிடம் வாலி ஆடிய 'டபுள் கேம்'! புரட்சி தலைவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா வித்தக கவிஞர்?
Recommended image2
பாடலிலேயே மகாபாரதத்தின் கதையை சொன்ன வாலி.. மணிரத்னம், இளையராஜா காம்போவில் 'தளபதி எனும் காவியம்'..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved