ஆங்கிலத்திலும் நான் கிங்கு; தமிழ் பாட்டில் இங்கிலீஷ் வார்த்தைகள் - அசத்திய வாலியின் டாப் 4 பாடல்கள்!
Lyricist Vaali : உண்மையில் மிகச் சிறந்த செல்ல பெயருடன் வலம் வந்த வெகு சில பாடலாசிரியர்களின் ஒருவர் தான் "வாலிபர் கவிஞர்" வாலி. காரணம் அவருடைய வரிகளில் இறுதிவரை வாலிபம் ததும்பியது.
Lyricist Vaali
பொதுவாக வயதான ஒருவரை குறிப்பிடும் பொழுது அந்த காலத்து மனிதர் ஆகையால், அவரிடம் அவருடைய காலத்து பழக்க வழக்கங்கள் தான் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட செட் ஆகாத ஒரு மனிதன் தான் வாலி. இளம் வயது முதல் பாடல் எழுதத் தொடங்கிய வாலி, தன்னுடைய 81 வது வயது வரை பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களோடு அவர் பயணித்து வந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார் போல தன்னுடைய வரிகளை அப்டேட் செய்து கொண்டே வந்தார் வாலி என்றால் அது கொஞ்சம் கூட மிகையல்ல.
வெளிநாடுகளுக்கே பயணம் செய்யாத வாலி வெளிநாட்டில் உள்ள எத்தனையோ விஷயங்களை தன்னுடைய பாடலில் புகுத்தி அசத்தியிருப்பார். அதற்கு அவருடைய பல பாடல்கள் அனைத்துமே சாட்சியாக நிற்கின்றது இருப்பினும் அதில் டாப் 4 பாடல்களை மட்டும் இந்த பதிவில் இப்போது காணலாம்.
கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்து கனவை தொலைத்த நடிகை சௌந்தர்யா!
Kadhalan movie
இதில் முதலாவது.. பிரபுதேவா நடிப்பில் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான "காதலன்" என்கின்ற திரைப்படம் தான். ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள், அதில் "என்னவளே அடி என்னவளே", "கோபாலா கோபாலா", "கொள்ளையில தென்னை வைத்து" போன்ற பாடல்களை வைரமுத்து மற்றும் கவிராயர் ஆகிய இருவரும் இணைந்து எழுதினர்.
அதே நேரம் இந்த திரைப்படத்தில் வெளியான "ஊர்வசி ஊர்வசி", மற்றும் "முக்காலா முக்காபுலா" ஆகிய பாடல்களை எழுதியது கவிஞர் வாலி தான். இதில் "முக்காலா முக்காபுலா" பாடலை சுவர்ணலதா மற்றும் மனோ ஆகிய இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள். "பிகாசோ ஓவியம் தான் தனியாக என்னுடன் டெக்ஸாஸில் ஆடி வருது.. கவ்-பாயின் கண் பட்டதும், பிளேபாயின் கைபட்டதும்.. ஒன்றாக மிக்ஸ் ஆனது" என்று இப்படி அந்த பாடல் முழுவதும் ஆங்கில வரிகளை அவ்வளவு அழகாக தமிழ் வரிகளோடு இணைத்து எழுதி மக்கள் அதை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருப்பார் வாலி.
Kadhal Desam
அதேபோல கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வினித், அப்பாஸ் தபு, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வெளியான திரைப்படம் தான் "காதல் தேசம்". இந்த திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், இந்த ஆறு பாடல்களுக்கும் வரிகளை எழுதியது வாலி தான். அதிலும் குறிப்பாக "ஹலோ டாக்டர் ஹார்டு வீக்கச்சே" என்று ஒரு பாடலை எழுதி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் வாலி.
காரணம் இந்த பாடல் முழுக்க பல ஆங்கில வார்த்தைகள், அதுவும் பல வார்த்தைகள் மருத்துவம் சார்ந்த வார்த்தைகளாக இருக்கும். உண்மையில் ஒரு மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகளை ஒரு பாடலோடு இணைத்து எப்படி இவரால் எழுத முடிந்தது என்று அப்போது பலருக்கும் இந்த பாட்டு பெரும் வியப்பை கொடுத்தது. காலங்கள் கடந்தும் நிற்கும் வாலியின் பல பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.
Sivaji
கடந்த 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் ஒலித்த திரைப்படம் தான் சிவாஜி. இந்த திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள், இதில் "வாஜி வாஜி", "சஹானா" மற்றும் "சஹாரா பூக்கள்" ஆகிய மூன்று பாடல்களை வைரமுத்து எழுதிய நிலையில், "பல்லேலக்கா", "தி பாஸ்" என்கின்ற சிவாஜி படத்தின் தீம் பாடல் மற்றும் "ஸ்டைல்" ஆகிய பாடல்களை நா முத்துக்குமார் மற்றும் பா விஜய் ஆகியோர் இணைந்து எழுதினார். இந்த படத்தில் வாலி அவர்கள் எழுதிய ஒரே ஒரு பாடல் தான் "அதிரடிகார மச்சானே" என்ற பாடல், இந்த பாடல் முழுவதும் ஆங்கில நடிகர்களின் பெயர்கள் மற்றும் ஆங்கில வார்த்தைகளை வைத்து விளையாடியிருப்பர் வாலி.
Osthe Movie
அதேபோல கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "ஒஸ்தி". இந்த திரைப்படத்தை தரணி இயக்க, தமான் இசையில் இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றது. இதில் யுக பாரதியும் சிலம்பரசனும் இணைந்து மூன்று பாடல்களை எழுதிய நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை வாலி தான் எழுதியிருந்தார். அதிலும் "தமிழ்நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான்" என்கின்ற பாடல் இன்றளவும் பலரின் விருப்ப பாடலாக இருந்து வருகின்றது.
இதிலும் "எடுப்பேன் ராபர் கிட்ட.. கொடுப்பேன் லேபர் கிட்ட" போன்ற பல சுவாரசியமான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி தன்னுடைய பாடலுக்கு கூடுதல் மெருகேற்றி இருப்பார் வாலி. உண்மையில் இதனால் அவரை வாலிப கவிஞர் வாலி என்று அழைக்கின்றார்கள் போல.