தன்மானத்தை சீண்டிய கண்ணதாசன்! மனைவியின் செயல்; பூரித்து போன நாகேஷ்!
நாகேஷ் - கண்ணதாசன் இருவருமே சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில், ஒருமுறை கண்ணதாசன் நாகேஷின் தன்மானத்தை சீண்டி தோற்று போன கதை உங்களுக்கு தெரியுமா?
Kannadasan
காலம் பலரை மறக்க செய்துவிடும், ஆனால் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் மிக சிலரே. அவர்களில் முக்கியவர்கள் நாகேஷ் மற்றும் கண்ணதாசன். கண்ணதாசன் வரிகள் தான் இன்றைய தலைமுறை பாடலாரிசியர்கள் பலருக்கு ஒரு பயிற்சி ஏடாக இருந்து வருகிறது. அவருடைய வரிகளை தழுவி சில பாடலாரிசியர்கள் பாடல் எழுதி உள்ளதை வெளிப்படையாக கூறி உள்ளனர்.
Actor Nagesh and Kannadasan
அதே போல் காமெடி நடிகராக 1960-களில் அறியப்பட்டு, பின்னர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கியவர் நாகேஷ். இவருடைய நடிப்பை கண்டு ரசிப்பதற்க்கே தனி ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை உள்ளது. எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல்.. திரையுலகை சேர்ந்த அனைவருடனும் நட்பு பாராட்டியவர் நாகேஷ். கண்ணதாசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான நாகேஷ் ஒருமுறை தன்னுடைய தன்மானத்தை கண்ணதாசன் சீண்டியது போல் பேசியதாகவும், தன்னுடைய மனைவியின் செயலால் அவர் தோற்றுப்போனார் என்கிற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
நெப்போலியன் கட்டியுள்ள மயோபதி மருத்துவமனை குழந்தைகளுக்கு நடிகர் கார்த்தி செய்த உதவி!
Kannadasan and nagesh Controversy
ஒரு நாள் நாகேஷ் ஷூட்டிங் முடித்துவிட்டு, ஸ்டூடியோவுக்கு வந்துள்ளார். அந்த ஸ்டூடியோவில் உள்ளே கவிஞர் கண்ணதாசனும் அவர் நடிக்கும் படத்திற்கு பாடல் எழுத வந்திருந்தார். இருவரும் சரியாக சாப்பிடும் நேரத்தில் அங்கு சந்திக்கிறார்கள். கண்ணதாசன் வீட்டில் இருந்து பல உணவுகள் வந்திருந்தது. குறிப்பாக அவருக்கு பிடித்த வெள்ளரிக்காயை கெட்டி தயிரில் போட்டு பச்சடி செய்து கொடுத்து அனுப்பி இருந்தனர்.
Coemdy Actor Nagesh
இதை நாகேஷிடம் காட்டிய கண்ணதாசன், நீ எவ்வளவோ சம்பாதிக்கிற இல்ல... உன் வீட்டில் இருந்து இப்படி ஒரு பச்சடி வருமா? என நாகேஷின் தன்மானத்தை சீண்டுவது போல் ஒரு கேள்வியை கேட்கிறார். அந்த பச்சடியை கண் கொண்டு பார்த்த நாகேஷ், தன்னுடைய இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் கும்பிட்டு விட்டு தன்னுடைய வீட்டில் இருந்து, இன்று எப்படியாவது இது போல் ஒரு பச்சடி வரவேண்டும். அதுவே நான் கண்ணதாசனுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என வேண்டிக் கொள்கிறார்.
'LIK 'படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ! பிரதீப் உள்ளே வந்தது எப்படி தெரியுமா?
Nagesh Wife Prepare Rita
அப்போது தான் கார் டிரைவர், நாகேஷ் மனைவி அவருக்கு கொடுத்து அனுப்பிய சாப்பாட்டுக்கேரியரை கொண்டு வந்து வைத்து விட்டு செல்ல, அதை மெல்லமாக நாகேஷ் ஓபன் செய்கிறார். அந்த டப்பாவின் மேலையே வெள்ளரிக்காய், கேரட் எல்லாம் போட்ட பச்சடி இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அன்று அவருக்கு தன்னுடைய சந்தோஷத்தை சொல்ல அளவே இல்லை. தன்னுடைய மனைவி தன்மானத்தை காப்பாற்றியதாக உணர்ந்துள்ளார். 300 கோடி ரூபாய் கொடுத்து இருந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் எனக்கு இருந்திருக்காது, அன்று என் மனைவி கொடுத்து அனுப்பிய அந்த பச்சடி கண்ணதாசனுக்கு பதிலடி கொடுப்பது போல் இருந்தது என, நாகேஷ் தன்னுடைய பழைய பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.