MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3 வாரம் ஆகியும் குறையாத மவுசு... கலகத் தலைவன் படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் லவ் டுடே

3 வாரம் ஆகியும் குறையாத மவுசு... கலகத் தலைவன் படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் லவ் டுடே

நேற்றைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி உதயநிதியின் கலகத் தலைவன் படத்தை விட அவர் வெளியிட்ட லவ் டுடே திரைப்படம் அதிகம் வசூலித்து உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 21 2022, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான பெரிய படங்களை ரிலீஸ் செய்துள்ளது. அதில் தோல்வி அடைந்த படங்களைவிட வெற்றி அடைந்த படங்கள் தான் ஏராளம். இவ்வாறு தொடர்ந்து சக்சஸ்புல் படங்களை வெளியிட்டு வரும் அந்நிறுவனம் அவ்வப்போது சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறது.

24

அந்த வகையில் உதயநிதியின் தயாரிப்பில், அவரே நாயகனாக நடித்து கடந்த நவம்பர் 18-ந் தேதி ரிலீசான படம் தான் கலகத் தலைவன். மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவு வசூலை குவிக்கவில்லை. இதற்கு காரணம் இவர் ரிலீஸ் செய்த மற்றொரு படம் தான்.

இதையும் படியுங்கள்... விஜய் படம் ரிலீசாவதை யாராலும் தடுக்க முடியாது... அடிச்சு சொல்லும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்

34

ஆம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் கடந்த நவம்பர் 4-ந் தேதி வெளியிட்ட லவ் டுடே திரைப்படம் தான் தற்போது உதயநிதி படத்துக்கே பாக்ஸ் ஆபிஸில் டஃப் கொடுத்து வருகிறது. இப்படம் ரிலீசாகி மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மவுசு குறையாமல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. அதன்படி இப்படம் 17 நாட்கள் முடிவில் உலகளவில் 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

44

அதில் குறிப்பாக விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் தமிழகத்தில் ரூ.1.94 கோடி வசூலித்து உள்ளது. ஆனால் உதயநிதியின் கலகத் தலைவன் திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.1.11 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. தான் ரிலீஸ் செய்த படம் நல்ல வசூலை குவித்து வருகிறது என்பது உதயநிதிக்கு சந்தோஷமாக இருந்தாலும், அப்படத்தால் தான் நடித்த படத்தின் வசூல் பாதிக்கிறதே என்பது அவருக்கு சற்று வருத்தமாகத் தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்... குட்டி நயனின் கிளாமர் அட்ராசிட்டி.. குட்டை உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த அனிகா! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பராசக்தியை பந்தாட பொங்கல் ரேஸில் குதித்த கார்த்தியின் வா வாத்தியார் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Recommended image2
Actress Sreeleela : 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்
Recommended image3
கான்ஜூரிங்கை மிஞ்சும் பயங்கரமான 5 திகில் படங்கள்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved