MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • LIK Movie Day 1 Box Office : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

LIK Movie Day 1 Box Office : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 11 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Love Insurance Kompany Day 1 Box Office
Image Credit : X

Love Insurance Kompany Day 1 Box Office

கோலிவுட்டின் ஹிட்மேனாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இதுவரை இவர் இயக்கிய படங்களும் சரி, நடித்த படங்களும் சரி அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கின்றன. இதனால் இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள். ஆனால் அவரோ தனக்கு பிடித்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு மிகவும் பிடித்து, அவர் நடித்த படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயனை வைத்து உருவாக இருந்தது. பின்னர் அப்படம் கைவிடப்பட்டு, அதை பிரதீப்பை வைத்து எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

25
அமோக வரவேற்பு
Image Credit : X

அமோக வரவேற்பு

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா, சீமான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஃபேண்டஸி கலந்த காதல் படமாக இது உருவாகி உள்ளது. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Related Articles

Related image1
Pradeep Ranganathan: லவ் இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பிறகு மாஸ் சர்ப்ரைஸ் ரெடி! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் படம்!
Related image2
LIK Review : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டக்கரா? மக்கரா? விமர்சனம் இதோ
35
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்
Image Credit : Twitter

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்

இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. Sacnilk தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் நாளில் இந்தியா முழுக்க 3 ஆயிரத்து 202 காட்சிகள் திரையிடப்பட்ட இப்படம் ரூ.7.93 கோடி வசூல் செய்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் மட்டும் ரூ.2 கோடி வசூல் செய்துள்ள இப்படம், ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளவில் ரூ.9.93 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த படங்களின் பட்டியலில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் இடம்பெற்றுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

45
எல்.ஐ.கே ரெஸ்பான்ஸ்
Image Credit : Twitter

எல்.ஐ.கே ரெஸ்பான்ஸ்

லவ் டுடே, டியூட், டிராகன் இந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் அதே வகையில் தான் வருகிறது. மத்தபடி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜென்சி பசங்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும் 40 வயதை கடந்தவர்களுக்கும் பேமிலி ஆடியன்ஸுக்கும் இந்த படம் பிடிக்குமா என்றால் சந்தேகம்தான். இந்தப் படத்தில் கதையின் நாயகனே SJ சூர்யா தான். மனுஷன் நடிப்பில் பொளந்து கட்டிட்டார். இரண்டு காட்சியில் ரங்கராஜ்_பாண்டே வருகிறார்.

55
எல்.ஐ.கே கதை
Image Credit : Twitter

எல்.ஐ.கே கதை

கதைப்படி படம் 2040 இல் கதை நகர்கிறது. பிரதீப் ரங்கநாதன் ஒரு பொண்ணை பார்க்கிறார் பார்த்த இடத்தில் காதல் வசப்படுகிறார். அந்தப் பொண்ணு மொபைல் ஆப்பில் லைகில் இன்ஃப்ளுயன்சராக வருகிறார். சீமான், பசுமைத்தாயகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த இடத்தில் மொபைல் யூஸ் பண்ண கூடாது. இயற்கை சார்ந்த இடம். ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு மொபைல் கூட கிடையாது. இந்த சூழ்நிலையில் இருவரும் காதலில் எப்படி ஜெயித்தார்கள் என்பதை மீதி கதை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
ஈஸ்வரிக்கு அப்பத்தா சொன்ன குட் நியூஸ்; கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
திருமணத்திற்கு பின் வந்த முதல் பிறந்தநாள்! தந்தையிடம் கிடைத்த கோடி ரூபாய் கிஃப்ட்; ராஷ்மிகாவிற்காக கட்டிய 'செரினிட்டி' அரண்மனை!
Related Stories
Recommended image1
Pradeep Ranganathan: லவ் இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பிறகு மாஸ் சர்ப்ரைஸ் ரெடி! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் படம்!
Recommended image2
LIK Review : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டக்கரா? மக்கரா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved