- Home
- Cinema
- லோகேஷ் முதல் எடப்பாடி வரை... சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்
லோகேஷ் முதல் எடப்பாடி வரை... சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

50 years of Rajinikanth in Cinema
ரஜினிகாந்த் என்றால் அனைவருக்கும் நியாபகத்துக்கு வருவது அவரது ஸ்டைல் தான். தன்னுடைய வசீகர நடிப்பால் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. அபூர்வ ராகங்களில் தொடங்கிய அவரது திரைப்பயணம் தற்போது கூலி மூலம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமா மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ்
கூலி எப்போதும் என் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படமாக இருக்கும், தலைவர் ரஜினிகாந்த் சார், உங்களால் தான் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்கள் இதயங்களையும், அன்பையும் கொட்டி இதனை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வாய்ப்புக்கும், படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பகிர்ந்து கொண்டதற்கும், உங்களுடனான உரையாடல்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பேன்! இவை நான் எப்போதும் போற்றும் தருணங்கள், ஒருபோதும் மறக்க மாட்டேன். எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்ததற்கு என் இதயப்பூர்வமான நன்றி, மேலும் 50 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த், இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு #கூலி உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.
லோகேஷ் கனகராஜ் தலைமையில், நமது துறையின் தூணான கலாநிதி மாறன் ஆதரவுடன், எப்போதும் புதுமையான அனிருத் மூலம் வளப்படுத்தப்பட்டு, எனது நீண்டகால நண்பர்கள் சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா மற்றும் சோபின் ஷாஹிர் ஆகியோரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள கூலியில் பணியாற்றி உள்ள என் செல்ல மகள் ஸ்ருதிஹாசனுக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து மிளிருங்கள் என பதிவிட்டுள்ளார்.
ஹிருத்திக் ரோஷன்
ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் எடுத்து வைத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர், ரஜினிகாந்த் சார், தொடர்ந்து ஒரு உத்வேகமாக இருங்கள். 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் என பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பதிவிட்டுள்ளார்.
மம்முட்டி
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அன்புள்ள ரஜினிகாந்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே ஒரு மரியாதை. கூலிக்கு வாழ்த்துக்கள். எப்போதும் உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருங்கள் என மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது.
திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன் என டிடிவி பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

