- Home
- Cinema
- தொலைக்காட்சி
- போலீஸ் தலையில் மிளகாய் அரைத்த பாக்கியம்: நடிப்புக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி!
போலீஸ் தலையில் மிளகாய் அரைத்த பாக்கியம்: நடிப்புக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி!
Bakiyam Fake Complaint Police Station Drama : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் போலீஸ் தலையிலேயே மிளகாய் அரைத்த பாக்கியத்தின் நாடகம் எப்போது தெரியவரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Pandian Stores 2 Today Episode Bakkiyam Drama
தங்கமயில் மற்றும் சரவணனின் பிரிவுக்கு பாக்கியம் தான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில் இப்போது இருவரும் நிரந்தரமாக பிரியவும் அவர் தான் காரணமாக இருக்க போகிறார் என்று தோன்றுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வார எபிசோடில் என்னுடைய மகளை அடித்து துரத்திவிட்டார்கள். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று புகார் கொடுத்தார்.
Pandian Stores 2 Police Station Scene
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில், கதிர், ராஜேஸ்வரி மற்றும் அரசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழலி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பெங்களூரு சென்றுவிட்டார் என்று கோமதி கூறவே அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வரவில்லை. மேலும், மீனாவும் தங்கமயிலும் குளோஸ் என்பதால் அவரது பெயரை புகாரில் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் மாணிக்கத்தை அழைத்த போலீஸார் உங்களது மகளை வரச்சொல்லுங்க. அவரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்க வேண்டும்.
Bakkiyam fake complaint against Pandian family
என்ன நடந்தது என்று நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறவே, எங்கு தங்கமயில் வந்தால் எல்லாவற்றையும் உலறி கொட்டிவிடுவார் என்று பயந்த பாக்கியம் அவருக்கு உடம்பு சரியில்லை மேடம். அவர் 3 நாட்களாக சாப்பிடவே இல்லை என்று டிராமாவை அரங்கேற்றினார். நல்ல குடும்பத்தில் பிறந்த யாரும் ஸ்டேஷனுக்கு வர மாட்டாங்க மேடம். சரி என்று கான்ஸ்டபிளை வரச்சொல்லி தங்கமயிலிடம் சென்று ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொண்டு வாங்க, கூட எஸ் ஐயை அழைத்துக் கொண்டு சென்று வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றார்.
Vijay TV Serial Pandian Stores 2 Latest Twist
இதை கேட்ட பாக்கியம் மேடம் முதலில் நாங்கள் போறோம். அதன் பிறகு இவர்களை வரச்சொல்லுங்க. என்னுடைய மகள் கொஞ்சம் பயந்த சுபாவம். போலீஸை பார்த்தால் பயந்துவிடுவார் என்று சொல்லி எப்படியோ சமாதானம் செய்தார். இதற்கிடையில் பாண்டியன் குடும்பத்தார் முன்னிலையில் பாக்கியத்திடம் என்ன புகார் கொடுத்தீங்க என்று சொல்லுங்க என்று சொன்னதும், அவர் அப்படி இப்படி என்று சுற்றி வழைத்து நாடகத்தை அரங்கேற்றினார். மேலும், என்னுடைய மகளை அடித்து துரத்திவிட்டார்கள் என்று ஒரு நாடகத்தை நடத்தினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட் பாக்கியம்
இதனால் கோபம் கொண்ட சரவணன் அவர்களை அடிக்க முயற்சித்தார். இந்த நிலையில் தான் கோமதியின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். முத்துவேலைப் பார்த்ததும் அப்பா என்று கூறி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பயமாக இருக்கு, காப்பாற்றுங்க என்றார். இதே போன்று கோமதியும் சக்திவேலுவின் கையை பிடித்துக் கொண்டு அழுதார்.
பாக்கியம் அக்காவோட நடிப்புக்கு ஒரு அளவே இல்லையா?
இதைப் பார்த்த பாண்டியனுக்கு ஷாக். ஏனென்றால், தங்கமயில் வீட்டிற்கு வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது பாக்கியத்திடம் நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வரதட்சணை புகார் கொடுங்கள். அவர்கள் உள்ளே வைத்தால் தான் புத்தி வரும் என்றார். இதனால் பாண்டியனுக்கும், சக்திவேலுவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது. சக்திவேல் ஸ்டேஷனுக்கு வந்த போது பாண்டியன் இதைத்தான் நினைத்துப் பார்த்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது.