அந்த ஒரு காரணத்துக்காக தந்தையை பழிவாங்கிய லோகேஷ் கனகராஜ் - வெளியான சீக்ரெட் தகவல்
Lokesh kanagaraj : சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் இவர், தனது தந்தையை ஸ்வீட்டாக பழிவாங்கிய சம்பவம் குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் செம்ம டிமாண்ட் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். ஏனெனில் அவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதனால் அவருடன் பணியாற்ற டோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள ஏராளமான முன்னணி நடிகர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
இதையும் படியுங்கள்... ‘மாமன்னன்’ படத்தில் மாரி செல்வராஜ் வைத்த எதிர்பாரா டுவிஸ்ட் - கதையின் நாயகன் உதயநிதி இல்லையாம்... இவர்தானாம்!
விக்ரம் படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் விக்ரம் படம் செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை தான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு மிகவும் லாபகரமான படமாக அமைந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் லோகேஷ் கனகராஜின் சம்பளமும் எகிறிக்கொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் ஆபரேஷன் சக்சஸ்! உடல்நலம் தேறி மீண்டும் அடுக்குத்தமிழில் பேசி அசர வைத்த டி.ஆர் - வைரலாகும் வீடியோ
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்க உள்ளார். இதை முடித்த பின் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகம், கைதி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் லோகேஷ்.
இதையும் படியுங்கள்... அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!
இவ்வாறு சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் இவர், தனது தந்தையை ஸ்வீட்டாக பழிவாங்கிய சம்பவம் குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயதில் இருந்தே தனது பெயரை லோகேஷ் என்றே பயன்படுத்தி வந்த இவர் சினிமாவிற்கு வந்த பின்னர் தனது தந்தை கனகராஜின் பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார். ஏனெனில் லோகேஷ் எப்போதும் சினிமா சினிமா என்று சுற்றுவதைப் பார்த்த அவரது தந்தை கனகராஜ், நீ சினிமாவிலேயே மூழ்கி சாகப்போறியா என திட்டுவாராம்.
அதற்காகத்தான் சினிமாவில் வந்த பின்னர் அவரது பெயரையும் சேர்த்து பயன்படுத்தி வருகிறாராம் லோகேஷ். இதைப்பார்த்த அவரது தம்பி, ‘உன்ன அவன் ஸ்வீட்டா பழிவாங்குறான் பா’ என தன் தந்தையிடம் சொல்லுவான் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.