MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உடைகிறது அனிருத் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி! ஹாட்ரிக் ஹிட் கொடுத்தும் பிரிவது ஏன்?

உடைகிறது அனிருத் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி! ஹாட்ரிக் ஹிட் கொடுத்தும் பிரிவது ஏன்?

அனிருத் உடன் மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி படங்களில் பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்திற்கான இசையமைப்பாளரை மாற்றி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 17 2025, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lokesh Kanagaraj, Anirudh Ravichander

Lokesh Kanagaraj, Anirudh Ravichander

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

24
Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் மூன்று படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியவற்றில் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். மாநகரம் படத்துக்கு ஜாவத் ரியாஸ் இசையமைத்து இருந்தார். பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படத்தின் சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தார். இதையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

இதையும் படியுங்கள்... கவினின் கிஸ் படத்தில் இருந்து சைலண்டாக விலகிய அனிருத்; காரணம் என்ன?

34
Anirudh, Rajinikanth

Anirudh, Rajinikanth

இதில் மாஸ்டர் படத்தில் பணியாற்றியபோது அனிருத் உடன் நெருங்கிய நட்பு உருவானதால், தன்னுடைய அடுத்தடுத்த படங்களான விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களிலும் அனிருத்தையே இசையமைக்க வைத்தார் லோகி. சுமார் 5 ஆண்டுகளாக சேர்ந்து பணியாற்றி வந்த இந்த கூட்டணி விரைவில் உடைய உள்ளது. கூலி படத்துக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

44
Sam CS

Sam CS

ஏனெனில் கூலி படத்தை எடுத்து முடித்ததும் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் முதல் பாகத்திற்கு சாம் சிஎஸ் தான் இசையமைத்து இருந்தார். அவரின் பின்னணி இசை அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. அதன் காரணமாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வேறு இசையமைப்பாளரை மாற்ற மனமின்றி சாம் சிஎஸ் இசையமைக்க ஓகே சொல்லி உள்ளாராம் லோகி. கைதி 2 படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களுக்கு அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமானை விட டபுள் மடங்கு சம்பளமா? அனிருத்தால் அரண்டு போன ஜெயிலர் 2 டீம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
லோகேஷ் கனகராஜ்
சாம் சி. எஸ்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved