- Home
- Cinema
- Pongal Release : பொங்கலுக்கு தியேட்டர் & ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ் - முழு பட்டியல் இதோ
Pongal Release : பொங்கலுக்கு தியேட்டர் & ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ் - முழு பட்டியல் இதோ
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை பல்வேறு ட்விஸ்டுகளுடன் இருக்கிறது. இந்த ஆண்டு தைப் பொங்கலுக்கு என்னென்ன படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகுது என்பதை பார்க்கலாம்.

பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழில் 5 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஜனவரி 14ம் தேதி இரண்டு படங்களும், ஜனவரி 15ந் தேதி மூன்று படங்களும் திரைக்கு வர உள்ளன.
வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜாக்கி
பிரகபல் இயக்கத்தில் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ஜாக்கி. இப்படமும் ஜனவரி 14-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திரெளபதி 2
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, நட்டி நட்ராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் திரெளபதி 2. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தலைவர் தம்பி தலைமையில்
ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள படம் தலைவர் தம்பி தலைமையில். இப்படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். இப்படம் ஜனவரி 15ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
சர்வர் சுந்தரம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாம்.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
120 பகதூர்
ரேசாங் லா போரை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், மேஜர் ஷைத்தான் சிங் மற்றும் 120 வீரர்களின் தியாகத்தை காட்டுகிறது. இப்படம் ஜனவரி 16ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.
பேங்க் ஆஃப் பாக்கியலட்சுமி
ஒரு கிராம வங்கியில் திருடச் சென்ற ஐந்து அமெச்சூர் திருடர்களின் கதை. இது ஒரு நகைச்சுவை கலந்த கிரைம் டிராமா. ஜனவரி 12ந் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
அகதா கிறிஸ்டி – செவன் டயல்ஸ்
1925 இங்கிலாந்தில் நடக்கும் ஒரு மர்மமான கொலை வழக்கைச் சுற்றிய த்ரில்லர் தொடர். இது நெட்பிளிக்ஸில் ஜனவரி 15ந் தேதி ஸ்ட்ரீம் ஆகிறது.
கேன் திஸ் லவ் பி டிரான்ஸ்லேட்டட்?
ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் கொரிய திரைப்பட நட்சத்திரத்திற்கு இடையிலான காதல் கதை. இது ஜனவரி 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் பொங்கல் ரிலீஸ்
ஒன் லாஸ்ட் அட்வென்ச்சர்: ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி சீசன் உருவான விதம் குறித்த ஆவணப்படம். இப்படம் ஜனவரி 12 முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
தஸ்கரி: தி ஸ்மக்லர்ஸ் வெப்
மும்பை விமான நிலையத்திலிருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. ஜனவரி 14 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது
தி ரிப்
மாட் டாமன் - பென் அஃப்லெக் நடித்த இந்த போலீஸ் த்ரில்லர், மியாமி காவல் துறையில் உள்ள ஊழலை வெளிப்படுத்துகிறது. ஜனவரி 16 முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்
பா பா பா
கேரள முதல்வர் கடத்தலைச் சுற்றிய ஒரு அரசியல் நையாண்டி காமெடி. ஜனவரி 16 முதல் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
குர்ரம் பாப்பிரெட்டி
சுடுகாட்டில் ஒரு சடலத்தைத் திருடச் செல்லும் ஒரு கும்பலின் டார்க் காமெடி கதை. ஜனவரி 16 முதல் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
மஸ்தி 4
அடல்ட் காமெடி தொடரின் நான்காவது பாகம் ஜீ5 ஓடிடியில் ஜனவரி 16 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
காலம்காவல்
“சயனைடு மோகன்” வழக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயங்கரமான மலையாள கிரைம் த்ரில்லர். இப்படம் ஜனவரி 16 முதல் சோனி லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

