- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pongal Special Movies on TV : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்
Pongal Special Movies on TV : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்
பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் புதுப்படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவதுபோல், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

Pongal Special Movies on Sun TV, Vijay TV, and zee Tamil
பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அதேவேளையில் சின்னத்திரை சேனல்களான சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றில் புத்தம் புது படங்கள் போட்டி போட்டு ஒளிபரப்புவார்கள். அந்த வகையில் 2026-ம் ஆண்டு பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவி பொங்கல் படங்கள்
சன் டிவியில் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 15-ந் தேதியன்று காலை 11 மணிக்கு தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படமும், மதியம் 3 மணிக்கு சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
மாட்டுப்பொங்கல் தினமான ஜனவரி 16-ந் தேதியன்று மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும், காணும் பொங்கல் தினமான ஜனவரி 17ந் தேதி மாலை 6.30 மணிக்கு அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும், ஜனவரி 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு விஷாலின் பூஜை படமும் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி பொங்கல் படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 15-ந் தேதி பொங்கல் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படமும், மாலை 4 மணிக்கு துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜனவரி 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சசிகுமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான டூரிஸ்ட் ஃபேமிலி, மாலை 4 மணிக்கு விஜய் ஆண்டணி ஹீரோவாக நடித்த சக்தித் திருமகன் ஆகிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
ஜனவரி 17-ந் தேதி காலை 10 மணிக்கு அதர்வா, ரெஜிஷா சஜயன் நடித்த டிஎன்ஏ திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
ஜீ தமிழ் பொங்கல் படங்கள்
ஜனவரி 15-ந் தேதி பொங்கலன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 10.30 மணிக்கு மாமன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்று மதியம் 1.30 மணிக்கு ஹவுஸ்மேட்ஸ் திரைப்படமும், மாலை 6 மணிக்கு மதராஸி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜனவரி 16-ந் தேதி மாட்டுப் பொங்கல் தினத்தன்று மதியம் 12.30 மணிக்கு விஜய் நடித்த கோட் திரைப்படமும், மாலை 6 மணிக்கு காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
கலைஞர் டிவி பொங்கல் படங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14-ந் தேதி காலை 8 மணிக்கு கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படமும், 10 மணிக்கு லவ் டுடே, 1.30 மணிக்கு வதந்தி வெப் தொடர் பாகம் 1, இரவு 10 மணிக்கு டைரி ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
ஜனவரி 15-ந் தேதி பொங்கலன்று காலை 10 மணிக்கு கட்டா குஸ்தி, மதியம் 1.30 மணிக்கு வதந்தி பாகம் 2, மாலை 6 மணிக்கு குடும்பஸ்தன், இரவு 9.30 மணிக்கு ஆதவன் ஆகிய திரைப்படங்கள் வர இருக்கின்றன.
ஜனவரி 16-ந் தேதி காலை 10 மணிக்கு டான் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு வதந்தி வெப் தொடர் பாகம் 3, மாலை 6 மணிக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரவு 9.30 மணிக்கு அஞ்சாதே ஆகிய படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

