- Home
- Cinema
- ‘உதயம் தியேட்டருல’ முதல் ‘காத்தடிக்குது’ வரை... சபேஷ் இத்தனை வைரல் ஹிட் கானா பாடல்களை பாடியிருக்காரா?
‘உதயம் தியேட்டருல’ முதல் ‘காத்தடிக்குது’ வரை... சபேஷ் இத்தனை வைரல் ஹிட் கானா பாடல்களை பாடியிருக்காரா?
இசையமைப்பாளர் சபேஷ், பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது தெரியும், ஆனால் அவர் பல்வேறு சூப்பர் ஹிட் கானா பாடல்களையும் பாடி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Sabesh Gana Songs
இசையமைப்பாளர் சபேஷின் குடும்பமே ஒரு இசைக் குடும்பம் என்று சொல்லலாம். சபேஷின் அண்ணன் தேவா, கோலிவுட்டில் இசையமைப்பாளராக கோலோச்சி இருந்தார். அதேபோல் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சபேஷின் மற்றொரு சகோதரர் முரளியும் இசையமைப்பாளர் தான். அதேபோல் நடிகர் ஜெய்யும், சபேஷின் உறவுக்காரர் தான். இவரும் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படி இசையமைப்பாளர் நிறைந்த ஒரு பிக் பாஸ் குடும்பமாக சபேஷின் குடும்பம் இருந்து வருகிறது.
பாடகராக ஜொலித்த சபேஷ்
சபேஷ் தன்னுடைய சகோதரர் முரளி உடன் சேர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருப்பது அனைவரும் அறிந்ததே... ஆனால் அவர் ஒரு சிறந்த கானா பாடகர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் மொத்தம் பாடியது ஐந்து பாடல்கள் தான். அந்த ஐந்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அந்தப் பாடலை கேட்டு இன்றைய இளசுகளும் வைப் செய்து வருகிறார்கள். அப்படி சபேஷ் பாடி ஹிட்டான கானா பாடல்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
சபேஷ் பாடிய பாடல்கள்
பிரசாந்த் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் கண்ணெதிரே தோன்றினால். இப்படத்திற்கு தேவா தான் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் ‘கொத்தால் சாவடி லேடி’ என்கிற கானா பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது. அவர் பாடிய முதல் பாடலும் இதுதான்.
அடுத்ததாக ராஜ் கபூர் இயக்கத்தில் அஜித், மீனா நடித்த ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உதயம் தியேட்டருல’ என்கிற கானா பாடலை பாடியதும் சபேஷ் தான். இந்தப் பாடலை தன் அண்ணன் தேவா உடன் இணைந்து பாடி இருந்தார் சபேஷ்.
இராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தில் இடம்பெற்ற ‘ஓட்ட ஒடசல்’ என்கிற கானா பாடலை பாடியதும் சபேஷ் தான். இந்தப் பாடலும் வெற்றி பெற்றது.
சபேஷின் கானா பாடல்கள்
பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த தேவதையை கண்டேன் திரைப்படத்திற்காக தேவா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடலான ‘ஒரே ஒரு தோப்புல’ என்கிற கானா பாடலை பாடியதும் சபேஷ் தான். ஸ்ரீலேகா பார்த்தசாரதி உடன் இணைந்து அப்பாடலை பாடி இருந்தார் சபேஷ்.
முரளி, சூர்யா நடிப்பில் வெளியான, காதலே நிம்மதி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கந்தன் இருக்கும் இடம்’ என்கிற பாடலை சபேஷ் தான் பாடி இருந்தார். அப்பாடலுக்கு அவரின் அண்ணன் தேவா இசையமைத்து இருந்தார்.
பிரபுதேவா நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன நினைவிருக்கும் வரை என்கிற திரைப்படத்திற்காக தேவா இசையமைத்திருந்த ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ என்கிற பாடலை கேட்டாலே டான்ஸ் ஆடத் தோன்றும். அந்த மாஸ்டர் பீஸ் கானா பாடலை பாடியதும் சபேஷ் தான்.