MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Lokesh kanagaraj : இந்த தப்பு இனி நடக்ககூடாது..! லோகேஷ் கனகராஜின் உத்தரவால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி

Lokesh kanagaraj : இந்த தப்பு இனி நடக்ககூடாது..! லோகேஷ் கனகராஜின் உத்தரவால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடி

லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல் ஆனதால் செம்ம டென்ஷன் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம். 

2 Min read
Author : Ganesh A
Published : Feb 16 2023, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடிக்கும் 67-வது படம் லியோ. மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

24

லியோ திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் புரோமோ வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இருந்தது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் படத்தின் ஷூட்டிங்கும் செம்ம ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ரோபோ சங்கரை வனத்துறையிடம் வசமாக சிக்க வைத்த ஹோம் டூர் வீடியோ... வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்

34

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு மாதங்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சில இணையத்தில் கசிந்து படுவைரல் ஆகி வந்தன.

44

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல் ஆனதால் செம்ம டென்ஷன் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம். அதன்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இனி யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் ஷூட்டிங் முடிந்த பின்னரே செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படுகிறதாம். இதனை கண்காணிக்க தனி குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இனி ஒரு காட்சி கூட லீக் ஆகிவிடக் கூடாது என்பதில் லோகேஷ் உறுதியாக உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Yogi babu : சிக்சர், பவுண்டரிகளாக அடிச்சு நொறுக்க யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த ‘தல’

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Recommended image2
Anirudh: கோடி கோடியாக கொட்டினாலும் தீராத ஏக்கம்.! அனிருத்தின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
Recommended image3
துளசியின் சதி அம்பலமானது! அன்புவிடம் சிக்கிய ஆதாரம் - ஆனந்தியை மிரட்டும் நபரால் சீரியலில் புதிய டுவிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved