லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா.. தேதி மற்றும் இடம் குறித்து வெளியான தகவல்!
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள, 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், பட குழுவினர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 'லியோ' படத்தில் இருந்து வெளியான 'நா ரெடி' பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், விரைவில் அடுத்த லிரிக்கல் பாடலையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, 'லியோ' படகுழுவினர் தற்போது இசை வெளியீட்டு விழாவை, மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்... இந்த முறை தமிழகத்தில் இல்லாமல், வெளிநாட்டில் அதாவது மலேசியாவில் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 5 தேதி நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்முறையாக தளபதி விஜய் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா, தமிழகத்தில் நடக்காமல் வெளிநாட்டில் நடைபெறுவது, தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வெளிநாட்டில் உள்ள ரசிகர்களை படு குஷியாக்கி உள்ளது. எனினும் இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
லியோ படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதமேனன், ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளதாகவும்... இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், மடோனா செபஸ்டின், ஜனனி போன்ற நடிகர்கள் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.