துரத்திவிட்ட பெற்றோர்; கணவரின் துரோகத்தால் கைக்குழந்தையுடன் பரிதவித்த மனோரமா!
தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மனோரமா, சினிமாவுக்கு வரும் முன் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தார் என்பதை பார்க்கலாம்.

கின்னஸ் சாதனை நாயகி மனோரமா
நடிகை மனோரமா தன்னுடைய பயணத்தை ஒரு நாடக நடிகையாக தொடங்கினார். அதன் பின்னரே அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதில் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். இவர் கிட்டத்தட்ட 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் ஜொலித்த மனோரமா, 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். இப்படி இவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், மனோரமாவின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மனோரமா காதல் கதை
மனோரமா சினிமாவுக்கு வரும் முன்னரே திருமணம் செய்துகொண்டார். இவர் ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் நடித்து வந்தபோது அக்கம்பெனியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை உருகி உருகி காதலித்தாராம். இவருடைய காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்து, அந்த பையன் உனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமானவன் இல்லை எனக்கூறி அவரது பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மனோரமா திருமணம்
எவ்வளவு சொல்லியும் குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்க முடியாததால், ஒரு கட்டத்தில் காதலில் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக எஸ்.எம்.ராமநாதனை திருமணம் செய்துகொண்டார் மனோரமா. திருச்செந்தூர் கோவிலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. பின்னர் வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவர்கள் மனோரமாவை வீட்டை விட்டே விரட்டி இருக்கிறார்கள். இதனால் கணவருடன் தனியாக வீடெடுத்து தங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளராக மாற நினைத்து மொத்த பணத்தையும் இழந்த நடிகைகள்.. சாவித்ரியின் நிலை யாருக்கும் வரக்கூடாது..
மனோரமானை கொடுமைபடுத்திய கணவர்
திருமணத்துக்கு பின் சில மாதங்களில் கர்ப்பமாகி இருக்கிறார் மனோரமா. கர்ப்பமான பின்னர் தான் அவருகு கணவரின் சுயரூபம் தெரிந்திருக்கிறது. அதன்படி கணவரின் முழு நோக்கமும் பணத்தின் மீது தான் இருந்துள்ளது. இதனால் கர்ப்பமாக இருக்கும்போது கூட மனோரமாவை நாடகங்களில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். காதலித்ததற்காக இதையெல்லாம் சகித்துக் கொண்ட மனோரமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
சினிமாவில் ஜொலித்த மனோரமா
குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு அவரது கணவர் குழந்தையை பார்க்க வரவில்லையாம். அதன்பின்னர் வந்தாலும் குழந்தை மீது பாசம் காட்டாமல், மீண்டும் எப்போது நடிக்க வருவ என கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். கணவரின் கொடுமை தாங்காமல் தன் கைக் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியே வந்த மனோரமா, சினிமாவில் நடிக்க தொடங்கி, பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். தன் மகனை சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே கடினமாக உழைத்து தனக்கென ஒரு தனி பெயரையும் சம்பாதித்திருக்கிறார் மனோரமா.
இதையும் படியுங்கள்... அம்மாவின் தங்கையை 2ஆவது திருமணம் செய்த அப்பா – வசதியை உதறி தள்ளி வறுமையில் வாடிய மனோரமா!