அடுத்த படத்தில் லெஜெண்ட் சரவணனின் புதிய கெட்டப் இது தானா..! சும்மா மாஸாக இருக்காரே... வைரலாகும் போட்டோஸ்!
லெஜெண்ட் சரவணன் புதிய கெட்டப்பில், திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர், குழுமத்தின் உரிமையாளர் சரவணன் அருள் கடந்த சில வருடங்களாகவே ட்ரெண்டிங்கில் உள்ள பிரபலங்களில் ஒருவர். பொதுவாக தொழிலதிபர்கள் சிலர் தங்களின் கடை விளம்பரங்களில் வந்து நாலு வார்த்தை பேசி விட்டு செல்லும் நிலையில், இவரோ கொஞ்சம் வித்தியாசமாக ஆட்டம்... பாட்டம் என பட்டையை கிளப்பினார்.
ஆரம்பத்தில் லெஜெண்ட் சரவணன், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் சேர்ந்து சில விளம்பரப்படத்தில் தோன்றியது விமர்சனத்திற்கு ஆளான நிலையில், அதுவே இவரை அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்றது.
தொழிலதிபர் என்பதை தாண்டி, தயாரிப்பாளராகவும்... ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் லெஜண்ட் சரவணன். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படம், வசூல் ரீதியாக, வெற்றிபெறவில்லை என்றாலும்... விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை குவித்தது.
லெஜெண்ட் சரவணன், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற போல், அருமையான கதைக்களம் கொண்ட ஒரு படத்தை தயாரித்து நடித்ததாக, ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து பலர், லெஜெண்ட் சரவணனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியானது. அதே போல் சமீபத்தில், லெஜெண்ட் சரவணன் புதிய கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படமும் படு வைரலானது.
இதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரது வீட்டில் நடந்த இல்ல திருமண விழாவில் லெஜெண்ட் சரவணன் கலந்து கொண்டுள்ளார். செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து, மாஸாக நடந்து வந்து மணமக்களுக்கு பூ கொத்து கொடுத்து வாழ்த்தி அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலர்... இது தான் லெஜெண்ட் சரவணனின் அடுத்த பட கெட்டப்பா என கேள்வி எழுப்பி வரும் நிலையில்... என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.